தேனி : தேனி மாவட்டம், பெரியகுளத்தில் விசிக கட்சி தலைவர் திருமாவளவன் பிரசாரத்தில் தொண்டர்கள் 'அட்ராசிட்டி'

தேனி : தேனி மாவட்டம், பெரியகுளத்தில் விசிக கட்சி தலைவர் திருமாவளவன் பிரசாரத்தில் தொண்டர்கள் ‘அட்ராசிட்டி’ தாங்க முடியாமல் ஒருவர் கன்னத்தில் ‘பளார்’ என அறைந்தார்.

திமுக கூட்டணியில் பெரியகுளம் (தனி) தொகுதி விசிக வேட்பாளர் சக்திவேலுக்கு ஓட்டு சேகரிக்க கட்சி தலைவர் திருமாவளவன் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் வேனில் இருந்தபடியே பிரசாரம் செய்தார். வேனில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், மாவட்ட செயலர் தங்க தமிழ்செல்வன் முன்னிலையில் பேசினார்.

தொண்டர்கள் 25க்கும் மேற்பட்டோர் வேனில் ஏறி செல்பி எடுக்க முயன்றனர். பலமுறை எச்சரித்தும் தொண்டர்கள் கேட்காததால் தொண்டர் ஒருவரின் கன்னத்தில் திருமாவளவன் ‘பளார்’ விட்டார். அந்த காட்சிகள் வைரலாகின.

விசிக பிரசார களத்தை பார்த்த பிறகட்சியினர் கூறுகையில், ‘விஜய் கட்சி தொண்டர்களை தற்குறி என விமர்சிக்கின்றனர். அவர்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிருபிக்கும் வகையில் பெரியகுளம் பிரசாரத்தில் சிறுத்தை குட்டிகள் உள்ளனர்’ என்றனர்.

Source link