தேனி: TVK – NTK கட்சியினர் மோதல்; கொலை மிரட்டல் விடுத்த தவெக மாவட்ட செயலாளர் மீது வழக்கு பதிவு!

தேனி நாம் தமிழர் கட்சியின் பொதுக் கூட்டத்தில் சாட்டை துரைமுருகன் பேசிக் கொண்டிருக்கும்போது இடையூறு செய்த த.வெ.க கட்சியினர்; தவெக மாவட்ட செயலாளர் உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு.

 தேனி தவெக தெற்கு மாவட்ட செயலாளார் லெஃப்ட் பாண்டி

தேனி பங்களாமேடு பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார்.

சாட்டை துரைமுருகன் மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போது அவ்வப்போது இரு சக்கர வாகனங்களில் வந்த விஜய் கட்சியினர் விசிலடித்து கொண்டி ’ TVK” ‘TVK’ என கூச்சலிட்டவாறே சென்று கொண்டிருந்தனர்

இதற்கு முன்னதாக  தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த தேனி தெற்கு மாவட்ட செயலாளர் லெஃப்ட் பாண்டி என்பவர் ’தவெகவை அதிகம் விமர்சனம் செய்கிறாய் தேனி மாவட்டத்திற்கு வந்து பாரு’ என சாட்டை துரை முருகனுக்கு கொலை மிரட்டல் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதைக் குறிப்பிட்டு நேற்று மேடையில் பேசிய துரைமுருகன், “நான் தேனியில் தான் இருக்கிறேன் உன்னால் முடிந்ததை செய்” என ஆக்ரோஷமாக பேசிவிட்டு புறப்பட்டு சென்றார்.

சாட்டை துரைமுருகன்
சாட்டை துரைமுருகன்

இந்த நிலையில் ஐந்து கார்களில் வந்து கூச்சலிட்ட தமிழக வெற்றிக் கழகத்தினரின் கார்களை சிறை பிடித்த நாம் தமிழர் கட்சியினர், அவர்களுடன் மோதலில் ஈடுபட்டனர். இதில் த.வெ.க கட்சியின் நிர்வாகி கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

தொடர்ந்து தேனி துணை காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் இருதரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது இடையூறு செய்த நபர் குறித்து தேனி நகர் போலீசார் விசாரணை செய்து தமிழக வெற்றிக் கழகத்தின் தெற்கு மாவட்டச் செயலாளர் லெஃப்ட் பாண்டி உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

Source link