தேசிய முற்போக்கு திராவிட கழகத்தில் நீண்ட காலமாகப் பணியாற்றி வந்த நடிகரும், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான மீசை ராஜேந்திரன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
விஜயகாந்த் நற்பணி மன்றத்தில் 31 ஆண்டுகளும், தேமுதிகவில் 20 ஆண்டுகளும் விசுவாசமாகப் பணியாற்றிய மீசை ராஜேந்திரன், அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் செய்தித் தொடர்பாளர் பதவியிலிருந்து விலகுவதாகத் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு இன்று கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் இபிஎஸை சந்தித்து அதிமுகவில் தன்னை முறைப்படி இணைத்துக் கொண்டார். நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததே விலகலுக்கு காரணம் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
