இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, இந்தியத் தேர்தல் ஆணையம் உடனடியாக விளக்கம் அளித்துள்ளது.
இது ஒரு துரதிர்ஷ்டவசமான “எழுத்துப் பிழை” (Clerical Error) என்றும், தவறுதலாக பாஜகவின் முத்திரை பயன்படுத்தப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தத் தவறு உடனடியாகச் சரி செய்யப்படும் என்றும் ஆணையம் உறுதியளித்துள்ளது.
தேர்தல் ஆணையம் பாஜகபுடன் இணைந்து வாக்கு திருட்டில் ஈடுபடுவதாகவும், அந்த கட்சியின் கைப்பாவையாக செயல்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் கூறி வரும் நிலையில் இத்தகைய குளறுபடிகள் ஆணையத்தின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன.
