தேர்தல் கால கலாட்டா

கொல்கட்டா: மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள 294 சட்டசபை தொகுதிகளுக்கு, இரு கட்டங்களாக தேர்தல் நடக்கவுள்ளது. ஏப்., 23ல், 152 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் நடக்கும் நிலையில், ஏப்., 29ல், 142 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது.

மே 4ல் ஓட்டு எண் ணிக்கை நடக்கிறது. தேர்தல் பிரசாரம் களை கட்டியுள்ள நிலையில், வாக்காளர்களை கவர புதுமையான மற்றும் வினோதமான பிரசார முறைகளை வேட்பாளர்கள் கையாண்டு வருகின்றனர்.

 பிர்பூ ம் மாவட்டத்தின் துப்ராஜ்பூர் தொகுதியில் போட்டியிடும் திரிணமுல் காங்., வேட்பாளர் நரேஷ் சந்திர பவுரி, ரம்ஜான் பண்டிகையை யொட்டி தொகுதியில் நடந்த ‘உறியடி’ போன்ற பானை உடைக்கும் விளையாட்டில் பங்கேற்றார்; பின்னர், ஓட்டு சேகரித்தார்

 துப்ராஜ்பூர் தொகுதி பா.ஜ., வேட்பாளர் அனுாப் குமார் சாஹா, அப்பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு ‘முகச்சவரம்’ செய்து ஓட்டு சேகரித்தார்

 பிதான் நகர் தொகுதி பா.ஜ., வேட்பாளர் டாக்டர் சர்வாத்வதா முகர்ஜி, சால்ட் லேக் சந்தையில், கையில் பெரிய ‘கட்லா’ மீனை பிடித்தபடி ஓட்டு சேகரித்தார்.

Source link