"தேர்தல் முடிந்ததும் பாஜக அதிமுகவை விழுங்கி துப்பிவிடும்" – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

திருப்பத்தூரில் நேற்று (மார்ச்.15) திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின் பாஜகவையும், எடப்பாடியையும் கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார்.

பாஜக தமிழ்நாட்டில் நேர்வழியில் உள்ளே நுழைய முடியாது என்பதால் பல குறுக்கு வழிகளை தேர்ந்தெடுத்து வருகிறது.

ஆனால் அது பலிக்காது. பாஜக சிபிஐ, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் இதையெல்லாம் வைத்து மிரட்டி அதிமுக கூட்டணியை உருவாகி இருக்கிறது.

மோடி, எடப்பாடி பழனிசாமி

இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதமர் திருச்சி வந்திருந்தார். 10 நாட்களுக்கு முன்பு மதுரை வந்திருந்தார். தேர்தல் நேரத்தில் மட்டும்தான் தமிழ்நாட்டுக்கு வருவார். ஆனால் எந்த நிதியும் தமிழ்நாட்டுக்கு வழங்கமாட்டார்.

பீகாரில் நிதீஷ்குமார் 10 முறை முதலமைச்சராக இருந்துள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அவர்தான் வெற்றி பெற்று முதலமைச்சரானார். இன்று அவரை ஓரம் கட்டிவிட்டு பாஜக ஆட்சியை பிடித்துள்ளது.

10 முறை முதலமைச்சராக இருந்த பீகார் முதல்வருக்கு இந்த நிலைமை என்றால் காலில் ஊர்ந்து சென்று போய் பதவியை பிடித்த எடப்பாடி பழனிசாமிக்கு என்ன நிலைமை என்று நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.

தேர்தல் முடிந்ததும் பாஜக அதிமுகவை விழுங்கி துப்பிவிடும். பாஜகவை எதிர்க்க வேண்டும் என்றால் ஒரு முதுகெலும்புள்ள முதல்வர் இருக்க வேண்டும். அது எடப்பாடியால் நிச்சயமாக முடியாது.

எடப்பாடி பழனிசாமி - பிரதமர் மோடி
எடப்பாடி பழனிசாமி – பிரதமர் மோடி

பாஜகவை எதிர்க்க கூடிய சக்தி நமது தலைவருக்கு மட்டும்தான் உள்ளது. மக்களும் அதை உணர்ந்துள்ளனர். ஒரு பழமொழி உள்ளது ஜாடிக்கேத்த மூடி என்று.

இப்போது மோடிக்கு ஏற்ற ஒரு அடிமையாக எடப்பாடி இருந்து வருகிறார். நிச்சயம் இந்த தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெறும்” என்று பேசியிருக்கிறார்.

Source link