விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத் துறையும் சிபிஐ-யும் சம்மன் அனுப்புவது போல, தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு அமித் ஷா, பழனிசாமியை அழைத்திருக்கிறார். அதிமுக-வும் பாஜக-வும் பரஸ்பரம் சம்மதித்து உருவான கூட்டணியா இல்லை சம்மன் கூட்டணியா? தொகுதிப் பங்கீட்டைக்கூட அமித் ஷாவிடம் கேட்டுச் செய்வதற்கு பதிலாக ‘பாஜக-வின் கிளைக் கழகம்தான் அதிமுக’ எனக் கட்சியின் விதியை பழனிசாமி திருத்திவிடலாம்.
கட்சியையே டெல்லியில் அடமானம் வைக்கத் துணிந்த பழனிசாமி, ஆட்சியில் இருந்த போது தமிழகத்தின் உரிமைகளை பாஜக-வுக்கு காவு கொடுத்த பழனிசாமி, இப்போது அதிமுக தொண்டர்களையும் முழுமையாக அடகு வைத்துவிட்டார். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை என பழனிசாமி புலம்பினாலும் அமித் ஷாவும், மோடியும் அதை பொருட்படுத்தவே இல்லை.
