தேர்தல் வருவதையொட்டி இஸ்ரேல் நாடாளுமன்றம் கலைப்பு

நாடாளுமன்ற கலைப்புக்கு முன் சர்ச்சை மசோதாக்கள் நிறைவேற்றம்

இஸ்ரேல் நாடளுமன்ற தேர்தல் வருகிற அக்டோபர் 27 அன்று நடைபெறவுள்ளதைத் தொடர்ந்து, நெசெட் என அழைக்கப்படும் இஸ்ரேல் நாடாளுமன்ற சபை கலைக்கப்பட்டது. இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய அக்டோபர் 7 தாக்குதலைத் தொடர்ந்து, 3 ஆண்டுகளாக காஸா மீது இஸ்ரேல் போர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், அடுத்தத் தேர்தலுக்கு முன்பு பதவியைத் தக்கவைக்க நெதன்யாகு போராடி வந்தார்.

இந்தச் சூழலில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் நஃப்தாலி பென்னட் மற்றும் முன்னாள் ராணுவத் தளபதி போன்ற எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் அடுத்த பிரதமராக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

பிரிட்டனின் தொழிலாளர் கட்சித் தலைவர் தேர்வு 

பிரிட்டனின் தொழிலாளர் கட்சி தலைவராக ஆன்டி பர்னம் ((andy-burnham)) தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் அவர் பிரதமர் ஆக பதவியேற்க உள்ளார். நாட்டின் பொருளாதார மந்தநிலை, கடும் விலைவாசி உயர்வு, அரசியல் ரீதியிலான சில தவறான முடிவுகள் காரணமாக ஸ்டார்மர் அரசின் மீது அந்நாட்டு மக்கள் அதிருப்தியில் இருந்தனர்.

கடந்த மாதம் இங்கு நடந்த உள்ளாட்சி தேர்தலில், தொழிலாளர் கட்சி பெரும் தோல்வியை சந்தித்ததால் பிரதமராக இருந்த கீர் ஸ்டார்மருக்கு நெருக்கடிகள் அதிகரித்தன. சொந்த கட்சிக்குள்ளேயே அவருக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில் பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த கீர் ஸ்டார்மர், கட்சித் தலைவர் பதவியில் இருந்தும் விலகினார்.

மெக்சிகோவின் சியபாஸின் கடற்கரை அருகே நிலநடுக்கம்  

மெக்சிகோவின் சியபாஸின் கடற்கரை அருகே பூமியில் இருந்து 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகியுள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சேதம் குறித்து இதுவரை தகவல் இல்லை.

Source link