தேர்தல் விதிமுறை மீறல் புகார்; விஜயை தொடர்ந்து சீமான் மீது வழக்கு பதிவு

நமது நிருபர்

தேர்தல் பிரசாரத்தின் போது விதிமீறலில் ஈடுபட்டதாக தவெக தலைவர் விஜயை தொடர்ந்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காரமடை தெற்கு ரத வீதியில், நாம் தமிழர் கட்சியின் கோவை வடக்கு தொகுதி வேட்பாளர் நர்மதா, கவுண்டம்பாளையம் தொகுதி வேட்பாளர் கலாமணி, மேட்டுப்பாளையம் தொகுதி வேட்பாளர் கோபாலகிருஷ்ணன், ஆகிய மூவரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் சீமான் இரவு 10 மணி 17 நிமிடங்கள் வரை பேசினார். இதை தொடர்ந்து வருவாய் துறையினர் கொடுத்த புகாரின் பேரில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மண்டல செயலாளர் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அன்சர் அலி மற்றும் மூன்று வேட்பாளர்கள் என ஐந்து பேர் மீது, காரமடை போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கொளத்தூர் தொகுதியில், தேர்தல் பிரசாரத்தின் போது விதிகளை விஜய் மீறியதாக ஐந்து பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source link