தேவா: தமிழக அரசு வேலையை விட்டுவிட்டு இசையமைப்பாளர் ஆனவர்

தேவா மரணம்: எப்பொழுதும் சிரித்த முகமாக இருந்த தேனிசைத் தென்றல் தேவாவுக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரை அருகில் உள்ள சூர்யா மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் காப்பாற்ற முடியவில்லை. அப்பா இறந்த செய்தி அறிந்ததும் மருத்துவமனையில் மகன் ஸ்ரீகாந்த் தேவா கதறி அழுததை பார்த்தவர்களுக்கு கண்ணீர் வந்தது.

தேவா தன் கெரியரை சினிமாவில் துவங்கவில்லை. தமிழக அரசின் பொதுப்பணித் துறையில் தான் முதலில் வேலை பார்த்தார். தேவநேசன் சொக்கலிங்கமாக பிறந்த அவர் சினிமாவுக்கு வந்த பிறகு தேவா என்று மட்டும் அழைக்கப்பட்டார்.

தேவா கெரியர்: அரசு வேலை, அதுவும் நிலையான வேலை, வாழ்க்கை செட்டில் ஆகிவிட்டது என்று தேவா திருப்தி அடைந்துவிடவில்லை. அரசு வேலையை விட தன் சினிமா கனவு முக்கியம் என நினைத்து அதை ராஜினாமா செய்தார்.

நிலையான வருமானம் வந்த வேலை வேண்டாம் என்று சினிமாவுக்கு வந்த தேவாவுக்கு உடனே பட வாய்ப்புகள் கிடைத்துவிடவில்லை. தன் தம்பிகளுடன் சேர்ந்து ஆரம்பத்தில் கஷ்டப்பட்டார். அவரின் தொடர் முயற்சியால் கிடைத்த வாய்ப்பு தான் மாட்டுக்கார மன்னாரு. அந்த படம் மூலம் இசையமைப்பாளரான தேவா, தனது மூன்றாவது படமான வைகாசு பொறந்தாச்சு படத்திற்காக மாநில அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருது பெற்றார்.

அண்ணாமலை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாமலை படம் மூலம் கெரியரில் அடுத்த கட்டத்திற்கு சென்றார் தேவா. தலைவரின் படங்கள் ரிலீஸான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று வரும் டைட்டில் கார்டை பார்க்க தியேட்டரில் கூட்டம் கூடும். அந்த டைட்டில் கார்டுக்கு மிரட்டலான இசை கொடுத்தவர் வேறு யாரும் அல்ல தேவா தான்.

அக்டோபர் 15ம் தேதி ரிலீஸான ஜெயிலர் 2 படத்தை திரையிட்டபோதும் ரஜினி டைட்டில் கார்டுக்கு தியேட்டர்களில் விசில் பறந்தது. நேற்று முன்தினம் தானே சார், தியேட்டரில் தலைவரின் டைட்டில் கார்டுக்கு வந்த உங்கள் இசையை கேட்டு கைதட்டினோம். இன்று இப்படி திடீரென்று எங்களை விட்டுவிட்டு சென்றுவிட்டீர்களே என ரஜினிகாந்த ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

போட்டி, பொறாமை: சினிமா என்றால் போட்டிகள், பொறாமை நிறைந்தது என்பார்கள். ஆனால் சக கலைஞர்களை பார்த்து பொறாமைப்படாத நல்ல குணம் கொண்டவர் தான் தேனிசைத் தென்றல் தேவா. இசைஞான இளைராஜா, இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், தற்போதைய இளம் இசையமைப்பாளர்கள் என அனைவரின் வளர்ச்சியையும், திறமையையும் பார்த்து பெருமையாக பேசி சந்தோஷப்பட்டார்.

இளம் இசையமைப்பாளர்களின் இசையில் பாடவும் செய்திருக்கிறார். தேவாவின் மரண செய்தி கேட்டவர்கள் எல்லோரும் சொல்லும் விஷயம் என்னவென்றால், அவருக்கு தலைக்கனமே கிடையாது. அவ்வளவு தன்னடக்கம் உள்ளவர். திறமைசாலிகளை ஊக்குவிக்கத் தவறாதவர் என்பது தான்.

பயம் இல்லை: இசைத் துறைக்கு புதியவர்கள் வருகிறார்களே, தன் வாய்ப்பு என்னவாகும் என தேவா பயந்ததே கிடையாது. அடுத்தவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதை பார்த்து சந்தோஷப்பட்டார். இப்படியொரு நல்ல மனிதரை மாரடைப்பு கொண்டு போய்விட்டதே என்பதே சோகமான விஷயம் ஆகும்.

சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்

தேவா மறைந்துவிட்டாலும் அவரின் தேனிசையும், அவர் பாடிய பாடல்களும் என்றும் நிலைத்து நிற்கும். இசை மூலம் அவர் தொடர்ந்து வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்.

Source link