திண்டுக்கல்: ”தே.ஜ., கூட்டணியின் சதிமுயற்சி தமிழகத்தில் வெற்றி பெறாது,” என வி.சி.க., தலைவர் திருமாவளன் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் அவர் அளித்த பேட்டி: மதுரையில் பிரசாரம் செய்த மஹாராஷ்டிரா முதல்வர், மெட்ரோ ரயில் வேண்டும் என்றால் பா.ஜ., கூட்டணிக்கு ஓட்டுபோட வேண்டும் என்கிறார். இதுதான் பா.ஜ., என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தேர்தல் களத்தில் கூட உருட்டல், மிரட்டல், ‘பிளாக்மெயில்’ அணுகுமுறையை பா.ஜ.,வினர் கையாள்கின்றனர்.
வட இந்தியாவில் ஜாதி, மதத்தால் மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடுவதை போல் தமிழகத்திலும் கைவரிசை காட்ட முயல்கின்றனர். அவர்களின் சதிமுயற்சி இங்கே வெற்றி பெறாது. இந்த தேர்தல் முடிவு அவர்களுக்கு சரியான பாடத்தை புகட்டும்.
அ.தி.மு.க., – பா.ஜ., – அ.ம.மு.க., – பா.ம.க., இணைந்திருப்பது, பொருந்தா கூட்டணி. கொள்கை அடிப்படையில் முரண்பட்டவர்கள், தேர்தல் ஆதாயத்திற்காக இணைந்துள்ளனர். அந்த விரக்தியில் தி.மு.க., கூட்டணி மீது தனிநபர் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
