தே.மு.தி.க.வில் இருந்து மீசை ராஜேந்திரன் விலகல்!

தேமுதிகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான மீசை ராஜேந்திரன், அக்கட்சியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கட்சியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.

முன்னதாக தேமுதிக சார்பில் 3 முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட இவருக்கு, இந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் அதிருப்தியில் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

“கேப்டன் மன்றத்தில் 31 ஆண்டும், தேமுதிகவில் 21 ஆண்டும் உழைத்திருக்கிறேன், ஆனால், நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட எனக்கு வாய்ப்பு தரவில்லை” என்று கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிக 10 இடங்களில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

Source link