தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து தேர்தல் நெருங்கும் வேளையில், எந்தெந்த தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் என்பதை இறுதி செய்யும் பணிகள் அண்ணா அறிவாலயத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தொகுதி தேர்வில் எவ்வித வெளிப்படைத் தன்மையும் இல்லை என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
“காங்கிரஸ் கட்சியின் தொகுதி தேர்வில் எவ்வித வெளிப்படைத் தன்மையும் இல்லை. வெளிப்படைத்தன்மையோடும், விரிவான விவாதத்திற்குப் பின்பே தொகுதி தேர்வு செய்யப்படவேண்டும் என்ற எங்கள் கருத்தை பொறுப்பாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
