தொகுதி பங்கீடு சர்ச்சை: திருமாவளவன் விளக்கம்|DMK Alliance Tension: VCK Chief Makes Bold Statement

ஊடகங்கள் திருமாவளவனை ‘கேம் சேஞ்சர்’ என்று சொல்கின்றன… திருமாவளவன் நினைத்தால் தமிழ்நாடு அரசியலின் திசை வழிப்போக்கை ஒரு சில நிமிடங்களில் மாற்றிவிட முடியும் என்று சமூக வலைதளங்களில் பேசுகின்றனர்.

ஆனாலும் கூட, அப்படிப்பட்ட ஒரு அரசியலை நமக்கு செய்ய விருப்பமில்லை. இங்கு புதிய மரபு மற்றும் நாகரிகமான அரசியல் செய்து வருகிறோம்.

திருமாவளவன்

திருமாவளவன்

இந்த அணுகுமுறைகள் எல்லாம் சரி வராது என்று பலர் நினைக்கலாம். அனைவரும் அறிந்த பல வாய்ப்புகள் வந்தும் நாம் முன்னிறுத்தக்கூடிய அரசியலை பாதுகாக்க… விசிக வலிமையை தக்க வைக்கவும் இன்று நாம் மத சார்பற்ற கூட்டணியில் இணைந்து நிற்கிறோம்.

தொகுதி பங்கீட்டில் பெருந்தன்மையாக நடந்துகொள்கிறோம். தற்காலிகமாக வெற்றிகரமான அணுகுமுறை என்று தோன்றினாலும், காலத்திற்கும் போற்றக்கூடிய வெற்றிகரமான யுத்தி.

அதனால், எத்தனை தொகுதிகளைப் பெற்றாலும் நம்முடைய எதிர்காலத்தோட வெற்றி. இன்று நம்பகத்தன்மை இழந்து பெறும் வெற்றி ஆகும்.

Source link