தொகுதி பங்கீடு முடியாத சூழலில் தேர்தல் அலுவலகம் திறந்தார் நாராயணசாமி!

தற்போது கூட்டணியே இழுபறியாக இருக்கும் நிலையில் இன்று காலை நெல்லித்தோப்பு கான்வென்ட் வீதியில் கட்சி தேர்தல் அலுவலகத்தை நாராயணசாமி திறந்துள்ளார். அதிகாலை 4.30 மணிக்கு கணபதி பூஜை செய்தார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவருக்கு நெருக்கமானவர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து காலை 9 மணிக்கு நெல்லித்தோப்பு காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் ஆலோசனையும் நடத்தினார். அதிகாரப்பூர்வமாக தொகுதி பங்கீடு நிறைவடையாத சூழலில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி தேர்தல் அலுவலகம் திறந்தது என்பது, யார் இத்தொகுதியில் போட்டியிடுவார்கள் என்ற கேள்வியை அதிகப்படுத்தியுள்ளது.

Source link