தொகுதி மறுவரையறை என்பது சமூக நீதியை சிறுமைப்படுத்தும் அரசியல் சதி: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

பெண்​களுக்​கான 33 சதவீத இட ஒதுக்​கீட்டை நாங்​கள் முழு​மனதோடு ஆதரிக்​கிறோம். அதில் மாற்​றுக்​கருத்​துக்கே இடமில்​லை. ஆனால், பொறுப்​போடு செயல்​பட்ட மாநிலங்​களைத் தண்​டிக்​கும் வகை​யில் தொகுதி எண்​ணிக்​கையை அதி​கரிக்​காமலேயே, அதை நடை​முறைப்​படுத்த வேண்​டும் என்​று​தான் நாங்​கள் கோரு​கிறோம். அவர்​களின் நோக்​கம் உண்​மை​யான​தாக இருந்​தால், இப்​போதுள்ள தொகுதி அளவிலேயே மகளிருக்​கான 33 சதவீத இட ஒதுக்​கீட்டை வழங்​கு​வதை எது​வும் தடுக்​க​வில்​லை​யே?

‘வளர்ந்த இந்​தி​யா’ என ஒரு​புறம் சொல்​லிக்​கொண்டே பல ஆண்​டு​களாக கிரீமிலேயர் உச்​சவரம்பை ரூ.8 லட்​சத்​தில் இருந்து மாற்​றாமல் வைத்​திருந்து ஓ.பி.சி. மக்​களுக்கு அவர்​களுக்​குரிய பங்​கீடு கிடைக்​காமல் வஞ்​சித்​தார்​கள். இதர பிற்​படுத்​தப்​பட்ட மகளிரின் பிர​தி​நி​தித்​து​வத்​துக்​கான எந்​த​வித உத்​தர​வாதத்​தை​யும் வழங்​க​வில்​லை. 2027 மக்​கள் தொகைக் கணக்​கெடுப்​பின் மூலம் முதல்​முறை​யாக நாம் அறிய​வுள்ள சாதி​வாரி எண்​ணிக்கை முடிவு​களைக்​கூட பரிசீலிக்​காமல் அவசர​மாக அவர்​கள் செயல்​படு​வது இதில் அவர்​களுக்கு உண்​மை​யான அக்​கறை இல்லை என்​பதை அம்​பலப்​படுத்​துகிறது.

இவர்​கள் செய்ய நினைப்​பது சீர்​திருத்​தமே அல்ல, இது அதி​காரத்தை ஓரிடத்​தில் குவித்​து, நாடாளு​மன்​றத்தை பலவீனப்​படுத்​தி, தென்​னகத்தை விளிம்பு நிலைக்​குத் தள்​ளி, சமூக நீ​தி​யைச் சிறுமைப்படுத்​து​வதற்​கான தன்​னிச்​சை​யான அரசி​யல் சதித் திட்​டம் என முதல்​வர் தெரிவித்​துள்​ளார்.

Source link