நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், திமுகவை வைத்து சில கணக்குகள் போடப்பட்டு வருகின்றன. ஒருவேளை இவர்கள் ஆதரவு தெரிவிக்காவிட்டால் என்ன நடக்கும் என்ற கேள்வியை பலரும் முன்வைக்கின்றனர். பாஜக இந்த விஷயத்தில் வெற்றி பெற்று விடுமா? எனக் கேட்கின்றனர்.
ஜூன் 20, 2026 அன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. முதல் நாளே இரு அவைகளும் ஸ்தம்பிக்கும் அளவிற்கு எதிர்க்கட்சிகள் செயல்பட்டன. அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் முறைகேடு, நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் மக்களவை, மாநிலங்களவையில் இரண்டுமே அமளி துமளி ஆனது. இந்த களேபரத்திற்கு இடையிலும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 34ல் இருந்து 38ஆக உயர்த்தும் மசோதாவை மக்களவையில் சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அறிமுகம் செய்தார்.
மழைக்கால கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதா
மறுபுறம் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் நாடாளுமன்ற நோக்கி நடந்த பேரணி வன்முறையில் முடிந்தது. இந்த சூழலில் நடப்பு கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதாவை எப்படியாவது தாக்கல் செய்து விட வேண்டும் என்று மத்திய பாஜக அரசு மும்முரம் காட்டி வருகிறது. இந்த மசோதாவை நிறைவேற்ற திமுகவின் ஆதரவை ஏதேனும் ஒரு வகையில் பாஜக நாடலாம் என்கின்றனர். ஏனெனில் தமிழக அரசியலில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தவெக பக்கம் சென்றுவிட்டன. திமுக தனித்துவிடப்பட்டுள்ளது. மத்தியிலும் ஆட்சியில் இல்லை. மாநிலத்திலும் அதிகாரத்தில் இல்லை. எனவே தனித்து அரசியல் செய்வதில் பல சிரமங்கள் இருக்கின்றன.
பாஜக தமிழகத்தில் கால் பதிக்குமா?
டெல்லியில் திமுகவின் நிலைப்பாடு என்ன?
திமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் முறைகேடு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதை காரணமாக வைத்து அமலாக்கத்துறை உள்ளே நுழையலாம். ஆகையால் அரசியல் ரீதியாக தங்களை காத்து கொள்ள அதிகாரத்தின் உதவியை திமுக நாட வேண்டியுள்ளது. ஆனால் பாஜக பக்கம் நகர்ந்தால் அது தமிழகத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் எனச் சுட்டிக் காட்டுகின்றனர். அதேசமயம் அவையில் இருந்து வெளிநடப்பு செய்து மறைமுக ஆதரவு அளிக்கலாம். இதை எம்.பிக்களின் எண்ணிக்கையை வைத்து கணக்கிட்டு பார்க்கலாம்.
மக்களவையில் மசோதாவை நிறைவேற்ற எம்.பிக்கள் பலம்
மக்களவையில் உள்ள மொத்த எம்.பிக்கள் 540 மசோதா நிறைவேற தேவையான பெரும்பான்மை 360 திமுக வெளிநடப்பு செய்தால் எஞ்சிய எம்.பிக்கள் எண்ணிக்கை 518 திமுக வெளிநடப்பிற்கு பின் தேவையான பெரும்பான்மை 345 பாஜக வசமுள்ள ஆதரவு எம்.பிக்கள் 341
அரசியலமைப்பு சட்டத்திருத்தம் – 3ல் 2 பங்கு ஆதரவு தேவை
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் தொகுதி மறுவரையறை மசோதா என்பது அரசியலமைப்பு சட்டத்திருத்தம். இதற்கு வழக்கமான ஆதரவு பொருந்தாது. அவையில் இடம்பெறும் மொத்த எம்.பிக்களின் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கு பேரின் ஆதரவு இருந்தால் தான் இந்த மசோதாவை நிறைவேற்ற முடியும். அது தொகுதி மறுவரையறை மசோதாவிற்கும் பொருந்தும். இந்நிலையில் மேற்சொன்ன எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் திமுக வெளிநடப்பு செய்த பின்னர் 4 எம்.பிக்கள் ஆதரவு கூடுதலாக தேவை. இது கிடைக்காவிட்டால் மசோதா தோல்வியை தழுவும்.
இதற்கிடையில் பாஜக கூட்டணியில் அல்லாத கட்சிகளின் நிலைப்பாட்டையும் கவனிக்க வேண்டியுள்ளது. உதாரணமாக சமாஜ்வாதி கட்சியானது மசோதாவை முழுமையாக படித்த பின்னர் ஆதரவு குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறது. இக்கட்சி வசம் 37 எம்.பிக்கள் இருக்கின்றனர். அடுத்து மாநிலங்களவைக்கு வருவோம். இங்கு மொத்த எம்.பிக்களின் எண்ணிக்கை 245. இங்கும் பெரும்பான்மைக்கு மூன்றில் இரண்டு பங்கு எம்.பிக்களின் ஆதரவு தேவை.
மாநிலங்களவையில் மசோதாவை நிறைவேற்ற எம்.பிக்கள் பலம்
மாநிலங்களவையில் தற்போதைய இருக்கும் எம்.பிக்கள் 241 பெரும்பான்மைக்கு தேவை 160 மாநிலங்களவையில் பாஜகவின் தனிப்பட்ட பலம் 117 பாஜக கூட்டணி எம்.பிக்கள் பலம் 152 மாநிலங்களவையில் திமுகவின் பலம் 8 திமுக வெளிநடப்பு செய்தால் மொத்த எம்.பிக்கள் 233 திமுக வெளிநடப்பு செய்த பின்னர் பெரும்பான்மைக்கு தேவையான எம்.பிக்கள் 155 மாநிலங்களவையை பொறுத்தவரை தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்றுவதற்கு திமுக அவையில் இருந்து எதிர்த்து வாக்களித்தால் 8 எம்.பிக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. அதுவே திமுக வெளிநடப்பு செய்துவிட்டால் 3 எம்.பிக்களின் ஆதரவு வேண்டும். இதனால் இந்த அவையிலும் மசோதாவை நிறைவேற்ற முடியாத சிக்கல் நீடிக்கிறது.
Source link
