தொடர்ந்து 9 முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன்! – அவரின் 6 சாதனைகள் இதோ!

பட்ஜெட் தாக்கலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் சாதனை என்னென்ன?

நிர்மலா சீதாராமன் - திரௌபதி முர்மு

இன்று 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் ஆகிறது.

இந்தப் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இது இவர் தொடர்ச்சியாகத் தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட் ஆகும். இது வரலாற்று சாதனை ஆகும்.

இது மட்டுமல்லாமல், பட்ஜெட் தாக்கல் செய்வதில் பல சாதனைகளைப் புரிந்துள்ளார் நிர்மலா சீதாராமன்.

மத்திய பட்ஜெட் - நிர்மலா சீதாராமன்
மத்திய பட்ஜெட் – நிர்மலா சீதாராமன்

அவை…

> 9 முறை பட்ஜெட் தாக்கல் செய்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் சாதனையைச் சமன் செய்கிறார் இவர். அடுத்து ஒரு பட்ஜெட்டைத் தாக்கல் செய்தால், இவர் முன்னாள் நிதியமைச்சர் மொரார்ஜி தேசாயின் சாதனையைச் சமன் செய்வார்.

மொரார்ஜி தேசாய் 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்தது தான் இதுவரை அதிகளவிலான எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

> 1999-ம் ஆண்டுக்கு பிறகு, ஞாயிற்றுக்கிழமை வாசிக்கப்படும் மத்திய பட்ஜெட் இன்று நடக்க உள்ளது. அதை வாசிக்கிறார் நிர்மலா சீதாராமன்.

> 2020-ம் ஆண்டு, இவர் மத்திய பட்ஜெட்டை 2 மணிநேரம் 42 நிமிடங்கள் வாசித்தார். இது இந்திய வரலாற்றில் அதிக நேரம் வாசிக்கப்பட்ட பட்ஜெட் ஆகும்.

> இந்தியாவின் முழுநேர பெண் நிதியமைச்சர் என்கிற பெருமை நிர்மலா சீதாராமனையே சேரும். இவர் 2019-ம் ஆண்டு மே மாதம் 31-ம் தேதி, இந்தப் பொறுப்பை ஏற்றார்.

தொடர்ந்து அதிக நாள்கள் நிதியமைச்சராக இருக்கும் பெருமையும் இவரையே சாரும். இந்தச் சாதனையை இவர் 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் பெற்றார்.

மத்திய பட்ஜெட் - நிர்மலா சீதாராமன்
மத்திய பட்ஜெட் – நிர்மலா சீதாராமன்

> பிரிட்டிஷ் பாரம்பரியத்தின் படி, பட்ஜெட் தாள்களை லெதர் சூட்கேஸில் கொண்டுவருவது வழக்கம். இதை மாற்றி, 2019-ம் ஆண்டு முதல், சிவப்புப் பட்டுத் துணியால் மூடி பட்ஜெட் தாள்களைக் கொண்டுவருகிறார் இவர்.

> 2021-ம் ஆண்டு, முதன்முறையாக பேப்பர் அல்லாத பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அதுவரை பட்ஜெட் அறிவிப்புகள் பேப்பரில் அச்சடிக்கப்பட்டுப் படிக்கப்படும். 2021-ம் ஆண்டு முதல், டேப்லெட்டில் இருந்து வாசிக்கப்படுகிறது.

Source link