‘தொழிற்சாலை’ வரையறை மனுக்கள் மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுடெல்லி: பெங்​களூரு குடிநீர் வடி​கால் வாரிய வழக்கை விசாரித்த உச்​ச நீ​தி​மன்ற 7 நீதிப​தி​கள் அடங்​கிய அரசி​யல்​ சாசன அமர்வு மருத்​து​வ​மனை​கள், கல்வி நிலை​யங்​கள், கிளப்​பு​கள், அரசின் நலத்​துறை​களில் பணிபுரி​யும் லட்​சக்​கணக்​கான தொழிலா​ளர்​களை தொழில் தகராறு சட்​டத்​தின் கீழ் கொண்டு வந்து தொழிற்​சாலை என்​ப​தற்​கான வரையறையை அளித்​தது.

இதனிடையே இதை எதிர்த்து மத்​திய அரசும், குஜ​ராத், மத்​திய பிரதேசம், ஹரி​யாணா உள்​ளிட்ட மாநில அரசுகளும், பழனி அருள்​மிகு தண்​டா​யுத​பாணி சுவாமி கோயில் உள்​ளடக்​கிய 46 மனுக்​களை உச்​ச நீ​தி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் தலைமையிலான அரசி​யல்​சாசன அமர்வு கடந்த 3 நாள்​களாக விசா​ரித்​தது. அனைத்து தரப்பு வாதங்​களை​யும் கேட்​டறிந்த உச்​சநீ​தி​மன்​றம், இந்த விவ​காரத்​தில் தீர்ப்பை தேதி குறிப்​பி​டா​மல்​ ஒத்​திவைத்​தது.

Source link