தொழில் துறை உற்பத்தி பிப்ரவரியில் 5.20% வளர்ச்சி

புதுடில்லி: நாட்டின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த பிப்ரவரி மாதத்தில் 5.20 சதவீதமாக அதிகரித்துள்ளது. தயாரிப்பு துறையின் வலுவான செயல்பாடுகளே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி கடந்தாண்டு பிப்ரவரியில் 2.70 சதவீதமாக இருந்தது.

கடந்த ஜனவரி மாதத்தில் 4.80 சதவீதம் என முன்பு தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், திருத்தப்பட்ட மதிப்பீட்டில் இது 5.10 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்தாண்டு பிப்ரவரியுடன் ஒப்பிடுகையில், தயாரிப்பு துறையின் வளர்ச்சி 2.80 சதவீதத்திலிருந்து ஆறு சதவீதமாகவும்; சுர ங்கத்துறையின் வளர்ச்சி 1.60 சதவீதத்திலிருந்து 3.10 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில், மின்சார துறையின் வளர்ச்சி 3.60 சதவீதத்திலிருந்து 2.30 சதவீதமாக குறைந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் – பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில், சராசரி தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி எவ்வித மாற்றமுமின்றி 4.10 சதவீதமாகவே தொடர்கிறது.

Source link