தோகா: ஈரான் நடத்திய தாக்குதல் காரணமாக, உலகின் முன்னணி இயற்கை எரிவாயு உற்பத்தியாளரான கத்தார் எனர்ஜி நிறுவனம்,

தோகா: ஈரான் நடத்திய தாக்குதல் காரணமாக, உலகின் முன்னணி இயற்கை எரிவாயு உற்பத்தியாளரான கத்தார் எனர்ஜி நிறுவனம், உற்பத்தியை நிறுத்தியுள்ளதாக அறிவித்து உள்ளது.

ஈரான் ஆட்சியாளரான கமேனியை கொன்றதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணைகளையும், டிரோன்களையும் வீசி வருகிறது. அந்த வகையில், கத்தாரில் உள்ள ராஸ் லபான் மற்றும் மெசயித் நகரங்களில் உள்ள இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையங்கள் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளன. உலகின் மிகப்பெரிய எல்என்ஜி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நாடுகளில் ஒன்றாக கத்தார் திகழ்கிறது. இந்த தாக்குதல் காரணமாக எரிவாயு உற்பத்தியை நிறுத்தி உள்ளதாக கத்தார் அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக கத்தார் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ராஸ் லபான் தொழில்நகரம் மற்றும் மெசயித் தொழில் நகரில் உள்ள எரிவாயு உற்பத்தி நிலையங்கள் மீது ராணுவ தாக்குதல் நடந்துள்ளது. இதனால், எல்என்ஜி மற்றும் அதனை சார்ந்த பொருட்கள் உற்பத்தி நிறுத்திவைக்கப்படுகிறது எனத் தெரிவித்துஉள்ளது. இதன் காரணமாக, ஐரோப்பிய நாடுகளில் இயற்கை எரிவாயுவின் விலை 50 சதவீதம் அதிகரித்துவிட்டது.

ஏற்கனவே, சவுதி அரேபியாவில் உள்ள ராஸ் தனுரா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதால் அங்கு உற்பத்தி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது.

Source link