"தோனி, கபில் தேவிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.!" – தந்தை பேச்சால் யுவராஜ் சிங் வேதனை

தனது தந்தை யோக்ராஜ் சிங் கூறி வரும் கருத்துகளுக்காக்க தோனி மற்றும் கபில் தேவ்விடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்திருக்கிறார்.

இந்திய அணி வென்ற இரண்டு உலகக் கோப்பை தொடர்களிலும் இடம்பெற்றிருந்தவர் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்.

இருப்பினும் எதிர்பாராத சூழல்களால் யுவராஜ் சிங் இந்திய அணியில் தொடர்ந்து இடம்பிடிக்க முடியாமல் போனார்.

யுவராஜ் சிங்

இதனைத்தொடர்ந்து தனது மகன் இந்திய அணியில் இடம்பெறாமல் போனதற்கு தோனிதான் காரணம் என்று யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் குற்றம்சாட்டி தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

அதேபோல முன்னாள் கேப்டன் கபில் தேவ் மீதும் அவர் கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.

1980-களில் கபில் தேவ் தன்னை மிரட்டியதாகவும், தனது கிரிக்கெட் வாழ்க்கையை சீர்குலைத்ததாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருந்த யுவராஜ் சிங்கிடம் தனது தந்தையின் விமர்சனங்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

தோனி - கபில் தேவ்
தோனி – கபில் தேவ்

அதற்கு யுவராஜ், “நான் தோனி மற்றும் கபில் தேவிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என் தந்தை பேசுவதை நான் ஆதரிக்கவில்லை. இது சரியல்ல என்று என் தந்தையிடமே நான் கூறிவிட்டேன்.

மேலும் 2017-ஆம் ஆண்டு நான் இந்திய அணியில் இடம்பெறாமல் போனதற்கானக் காரணத்தை தோனி என்னிடம் வெளிப்படையாகப் பேசி விளக்கினார்” என பதிலளித்திருக்கிறார்.

Source link