த்ரிஷா ரோடு ஷோ: கோவை சொல்லும் அரசியல் மெசேஜ்- 1984 ஜெயலலிதா ரூட்டில் என்ட்ரியா? – expectations over actress trisha in tamil nadu politics with coimbatore road show

கோவையில் நடிகை த்ரிஷா ரோடு ஷோ நடத்தியது பெரிதும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. இவரது அரசியல் வருகை கடந்த சில மாதங்களாகவே பேசுபொருளாக இருக்கும் சூழலில், கோவையில் கிடைத்த வரவேற்பு கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கிடையில் விரைவில் ராஜ்யசபா எம்.பியாக பொது வாழ்க்கையில் தடம் பதிப்பார் என்று பேச்சு வலுத்து வருகிறது.

கோவையில் புதிதாக iMobiles ஷோரூம் திறப்பு விழாவிற்காக நடிகை த்ரிஷா அழைக்கப்பட்டிருந்தார். இதற்காக கோவை விமான நிலையத்தில் வந்திறங்கியவற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்கள், ”மேடம் அரசியலுக்கு எதும் வருவீங்களா மேடம்?” என்று கேள்வி எழுப்பினர். அவர் பதில் எதுவும் சொல்லாமல் கடந்து சென்றார். இதன்மூலம் த்ரிஷாவின் அரசியல் வருகை மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து நீடித்து வருவதை புரிந்து கொள்ள முடிகிறது. 2026 சட்டப்பேரவை தேர்தலில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் பெற்ற வெற்றியானது பலர் எதிர்பாராத ஒன்று.

விஜய் வெற்றி கொடுத்த உற்சாகம்

இந்த வெற்றியின் பின்னணியை புரிந்து கொள்ள இன்றளவும் ஆராய்ந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி புதியவர்கள் பலருக்கு அரசியல் ஆசையை அதிகப்படுத்தியுள்ளது. பாஜகவில் இருந்து We the leaders மூலம் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கும் வேலைகளில் ஈடுபட்டு வருவது பலரும் அறிந்த விஷயம். அதேசமயம் திரைத்துறையில் இருந்து தான் பலருக்கும் அரசியல் மீதான ஈடுபாட்டை அதிகப்படுத்தியிருக்கிறது.

விஜய் சீட் பேர அரசியல் செய்ய மாட்டார்! மக்கள் நினைப்பது இது தான்_

திரைத்துறையில் அதிகரிக்கும் அரசியல் ஆசை

தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் தங்களது ரசிகர்கள் மன்றங்களை வலுப்படுத்துதல், நற்பணி மன்றங்களாக மாற்றுதல், உறுப்பினர் சேர்க்கையை முடுக்கி விடுதல், மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், பண்டிகை காலங்களை மக்களுடன் சேர்ந்து கொண்டாடுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தான் நடிகை த்ரிஷாவின் நகர்வுகளும் கவனிக்கப்பட்டு வருகின்றன.

நான் CM ஆகணும்- நடிகை த்ரிஷா வைரல் வீடியோ

2004ஆம் ஆண்டு கில்லி திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டான சமயத்தில், த்ரிஷாவை பலரும் கவனிக்க் தொடங்கினர். அப்போது சன் டிவிக்கு அளித்த பேட்டியில், அடுத்தடுத்து என்னவெல்லாம் பண்ணலாம் என நினைக்கிறீர்கள்? எனக் கேட்டதற்கு, நான் CM ஆகணும் என சட்டென சொல்லியிருப்பார். இதை யாரும் நம்பாமல் கிண்டலாக மீண்டும் கேட்பர்.

ஆனால் அவர், நிஜமாக தான் சொல்கிறேன் என்பார். CM ஆனதும் என்னவெல்லாம் செய்வீர்கள் எனக் கேட்பர். முதலில் நீங்கள் எனக்கு ஓட்டு போடுங்கள். அப்புறம் சொல்வேன் என்று நடிகை த்ரிஷா பதிலளிப்பார். இது விளையாட்டாக சொன்னாரா, இல்லை சீரியசாக சொன்னாரா? என்பது ஒருபுறம் இருக்கட்டும்.

ஜெயலலிதா ரூட்டில் த்ரிஷாவின் அரசியல் என்ட்ரி

சுமார் 22 ஆண்டுகள் கழித்து அந்த பேட்டி முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்கு மாறியிருக்கிறது. அதுவும் அதற்கான சாத்தியக் கூறுகளையும் அரசியல் விமர்சகர்கள் முதல் ஜென் ஸி நெட்டிசன்ஸ் வரை தெளிவாக சுட்டிக் காட்டுகின்றனர். முதலில் கட்சியில் முக்கிய பதவி, அதன்பிறகு ராஜ்ய சபா எம்.பி பதவி, எம்.எல்.ஏ சீட், எதிர்க்கட்சி தலைவர், சி.எம் என லிஸ்ட் போடுகின்றனர். இதை உன்னிப்பாக கவனித்தால் அதிமுகவில் ஜெயலலிதாவின் அரசியல் பயணத்துடன் பொருந்தி போகிறது. முதன்முதலில் 1984ஆம் ஆண்டு ராஜ்ய சபா எம்.பி சீட்டை ஜெயலலிதாவிற்கு அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் வழங்கினார்.

தவெகவில் ராஜ்ய சபா எம்.பி – 2028ல் வரும் காலியிடங்கள்

வரும் 2028ஆம் ஆண்டு தமிழகத்தில் 6 ராஜ்ய சபா எம்.பி சீட்கள் காலியாக உள்ளன. தவெகவிற்கு தற்போது 109 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றன. இன்னும் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். மேலும் சில எம்.எல்.ஏக்கள் அதிமுகவில் இருந்து தவெகவிற்கு வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே இன்னும் இரண்டு ஆண்டுகளில் தவெகவின் பலம் 120ஐ தொட்டுவிடும் என்கின்றனர். இதை வைத்து கணக்கிட்டால் குறைந்தது 3 ராஜ்ய சபா எம்.பி சீட்கள் கிடைக்கும். அதில் நடிகை த்ரிஷாவிற்கு வாய்ப்பளிக்கலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.

கோவை ரோடு ஷோ சொல்லும் சேதி

நடிகை த்ரிஷாவின் அரசியல் வருகை குறித்து ஊடகங்களிலும், யூடியூப்களிலும் காரசாரமாக விவாதிக்கப்பட்டாலும், அதுபற்றி அவர் எந்த இடத்திலும் பதிலளித்தது இல்லை. அதை மறைமுகமாக வெளிப்படுத்தும் சூழலும் உருவாகவில்லை. இந்த சூழலில் முதலமைச்சர் விஜய் நடத்தும் ரோடு ஷோக்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சூழலில், அதே பாணியிலான விஷயத்தை த்ரிஷா தரப்பும் கையிலெடுத்திருப்பது, பொது வாழ்விற்கான தொடக்கப் புள்ளியா? என்ற கேள்வியை எழுப்புகின்றனர்.

Source link