த.வெ.க. மகளிர் தின விழாவில் கலந்து கொண்ட அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை குத்தாட்டம் போட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள பின்னையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (வயது 58). இவர் சங்கரநாதர்குடிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக உள்ளார். தற்போது வெள்ளத்தேவன்விடுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பொறுப்புத் தலைமை ஆசிரியராக பணியில் உள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரத்தநாடு பகுதியில் தவெ. சார்பில் மகளிர் தின விழா நடந்துள்ளது.
இந்த விழாவில் தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி கலந்து கொண்டு நடிகர் விஜய் நடித்த சினிமா படப் பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த வீடியோ கடந்த சில நாட்களாக சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில் மாவட்ட கல்வி அதிகாரி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் விசாரணை நடந்து வருகிறது. மேலும், அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை ஒரு அரசியல் கட்சி மேடையில் ஏறி குத்தாட்டம் போட்டது என்பது பேசுபொருளாகி உள்ளது.
