சென்னை: த.வெ.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்ட, அ.தி.மு.க., திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலர் துாசி மோகன், அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அ.தி.மு.க., திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான துாசி மோகன், தமிழக வெற்றிக் கழகம் சார்பில், செய்யாறு தொகுதியில் போட்டியிடுவதாக, த.வெ.க., தலைவர் விஜய் அறிவித்தார். இதனால், அ.தி.மு.க.,வில் அதிர்ச்சி ஏற்பட்டது.
இந்நிலையில், துாசி மோகனை, மாவட்டச் செயலர் பொறுப்பில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்தும், நீக்குவதாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார். திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலராக, அ.தி.மு.க., அமைப்புச் செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான முக்கூர் சுப்பிரமணியன் நிமியக்கப்படுவதாகவும் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
