த.வெ.க.,வுக்கு தேர்தல் கமிஷன் கொடுத்திருக்கும் விசில் சின்னம் மக்களிடையே மிக விரைவாக சென்று விட்டது. ஆனாலும்,

த.வெ.க.,வுக்கு தேர்தல் கமிஷன் கொடுத்திருக்கும் விசில் சின்னம் மக்களிடையே மிக விரைவாக சென்று விட்டது. ஆனாலும், வயதான பெரியோர், த.வெ.க., கொடியில் இரட்டை யானை இருப்பதால், அதுவே த.வெ.க.,வின் சின்னம் என நினைத்துக் கொண்டு இருக்கின்றனர்.
உதயசூரியன், இரட்டை இலை சின்னங்கள் குறித்த தெளிவு மக்களிடம் இருப்பது போல, விசில் சின்னம் குறித்த தெளிவும் வர வேண்டும். அதற்கு, மக்கள் மத்தியில் த.வெ.க.,வினர் விசில் சின்னம் குறித்த தகவல்களை வேகமாக கொண்டு செல்ல வேண்டும்.
அதேபோல, விசில் சின்னம், ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் எந்த இடத்தில் இருக்கும் என்பதையும் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

– அருண் ராஜ், கொள்கை பரப்பு பொதுச்செயலர், த.வெ.க.,

Source link