2026 மார்ச் மாதத்திற்குள் இந்தியாவை நக்சல் இல்லாத நாடாக மாற்ற மத்திய அரசு இலக்கு வைத்திருந்தது. அதற்கான தொடர் முயற்சிகளின் பலனாக பல மாநிலங்களில் நக்சலைட்கள் அமைதிப் பாதைக்கு திரும்பினர்.
இதை தொடர்ந்து , தெலுங்கானாவில் இருந்த மாவோயிஸ்ட் மக்கள் விடுதலை கெரில்லா ராணுவத்தின் தளபதி சோடி மல்லா உட்பட 42 நக்சல்கள் மாநில காவல்துறையிடம் சரணடைந்துள்ளனர். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெலங்கானா டிஜிபி சிவதர் ரெட்டி வெளியிட்டுள்ளார். இதனால் நக்சல் இல்லாத மாநிலமாக தெலுங்கானா மாறியுள்ளது , கடந்த மாதம் ஆந்திரா நக்சல் இல்லாத மாநிலமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சரணடைந்தவர்கள் தங்களிடம் இருந்த ஏகே-47 துப்பாக்கிகள், எஸ்.எல்.ஆர் துப்பாக்கிகள், இன்சாஸ் துப்பாக்கிகள், ஸ்டென் கன் , கையெறி குண்டுகள் மற்றும் 1007 தோட்டாக்களையும் ஒப்படைத்தனர். இது மட்டுமல்லாமல் 800 கிராம் தங்கத்தையும் சேர்த்து ஒப்படைத்தனர்.
மாநில அரசாங்கம் இவர்களுக்கு மறுவாழ்வு திட்டங்களை அறிவித்து ஹெல்த் இன்சூரன்ஸ் , தொழில் செய்ய ஆட்டோ ரிக்ஷாக்கள் , குழுவினருக்கு ₹1.93 கோடி நிதியுதவி ஆகியவற்றையும் வழங்கியுள்ளது.
