புதுடில்லி: நடப்பு நிதியாண்டின் ஜனவரி மாதம் வரையிலான முதல் 10 மாதங்களில், இந்தியாவின் ஒட்டுமொத்த மின் உற்பத்தி திறன் 11 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளதாக மத்திய மின்சார துறை அமைச்சகம் தெரிவித்து உ ள்ளது.
அனைத்து வகையான ஆதாரங்கள் வாயிலாகவும் மொத்தம் 52,537 மெகாவாட் புதிய மின் உற்பத்தி திறன் நிறுவப்பட்டு, சாதனை படைக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த நிதியாண்டில் 34,054 மெகாவாட் மின் உற்பத்தி திறன் சேர்க்கப்பட்டதே இதற்கு முந்தைய சாதனையாக இருந்தது.
