தளபதியின் ஜனநாயகன் படத்தில் இருந்து என் காட்சிகளை நீக்கிவிட்டார்களே என கண்கலங்கிய நிலையில் தற்போது ஆனந்த கண்ணீர் விட்டு லவ் யூ என்று சொல்லி வீடியோ வெளியிட்டுள்ளார் ஆனந்தி. அதை பார்த்து விஜய் ரசிகர்கள் ஹார்டின் விட்டுள்ளனர்.
முக்கிய அம்சங்கள்:
ஜனநாயகனில் நடித்திருந்த ஆனந்திஆனந்தியின் மனதை மாற்றிய குட்டி ஸ்டோரி2ஆனந்தியின் புது முடிவு
ஆனந்தி ஹேப்பி: ரிலீஸானை மூன்று நாட்களிலேயே உலக அளவில் ரூ. 171. 84 கோடி வசூலித்த முதல்வர் ஜோசப் விஜய்யின் ஜனநாயகன் படத்தில் நடித்தவர் ஆனந்தி. சின்னத்திரையில் உச்சத்தில் இருந்த அவர் கம்பேக் கொடுத்த பிறகு தான் நடிக்க சரியென்று சொன்ன முதல் படமான ஜனநாயகனின் முதல் நாள் முதல் காட்சியை தியேட்டரில் பார்த்தபோது அப்படியே ஷாக் ஆகிவிட்டார்.
தான் நடித்த காட்சிகள் ஜனநாயகனில் இல்லாமல் போகவே அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில் ஜனநாயகன் BTS வீடியோவை இன்று வெளியிட்டுள்ளார். ஜனநாயகன் ஷூட்டிங் நடந்த இடத்தில் செல்போன்களுக்கு அனுமதி இல்லை என்பதால் அங்கிருந்து எந்த வீடியோவும் வெளியிடவில்லை. செட்டில் விஜய்யை சந்தித்த நாள் தன் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் என மீண்டும் அழுதார். ஆனால் இந்து சந்தோஷத்தில் வந்த கண்ணீர் என்றார். மேலும் லவ் யூ தளபதி என்று சொல்லி விஜய்க்கு கேமரா முன்பு ஒரு பறக்கும் முத்தமும் கொடுத்திருக்கிறார்.
வீடியோவை வெளியிட்டு ஆனந்தி இன்ஸ்டாவில் கூறியிருப்பதாவது, நடிகர்களின் போராட்டம் யாருக்கும் தெரிவது இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு சோஷியல் மீடியா என்பது பெரிய விஷயம் இல்லை. ஆனால் தற்போது நம்பிக்கையை பார்க்கிறேன். இனி நான் சிறு கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன். இனி நடிக்கவே கூடாது என்று சில நாட்களுக்கு முன்பு முடிவு செய்தேன். ஆனால் நதிபோல ஓடிக்கொண்டிரு என்று தளபதி சொன்ன குட்டி ஸ்டோரி நினைவுக்கு வந்தது என்றார்.
சோகத்தில் ஆனந்தி: ஆனந்தி ஆனந்த கண்ணீர் விட்டுட்டார், தளபதியை பார்த்துட்டார் என்று விஜய் ரசிகர்கள் அந்த வீடியோவை ஷேர் செய்கிறார்கள். முன்னதாக ஜனநாயகன் FDFS பார்த்து எடிட்டிங்கில் தன் காட்சிகள் நீக்கப்பட்ட சோகம் ஒரு பக்கம் இருந்தாலும் இனி விஜய்யை பார்க்க முடியாதே என்கிற துக்கத்தில் வெளியே வந்தவரால் அழுகையை அடக்க முடியவில்லை. படம் குறித்து என்ன சொல்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டபோது அழுதபடியே நின்றார். அதன் பிறகு ஒரு வழியாக பேசிய ஆனந்தியோ, ஜனநாயகன் படம் சூப்பரா இருக்கு என்றார்.
வீட்டிற்கு சென்ற பிறகு தான் தன் காட்சிகள் மிஸ்ஸானதை சொல்லி அழுதார். விஜய் சாரின் கடைசி படம் என்பதால் இனி ஆசைப்பட்டாலும் அவருடன் சேர்ந்து நடிக்க முடியாதே. அப்படி இருக்கும்போது அரிதான வாய்ப்பு கிடைத்து நடித்தும் கூட பலனில்லாமல் போய்விட்டதே என வேதனைப்பட்டார். ஜனநாயகனுக்கு முன்பு சூர்யாவின் கருப்பு படத்திலும் ஆனந்தியின் காட்சிகளை நீக்கிவிட்டார்கள். அடுத்தடுத்து இரண்டு படங்களில் காட்சிகள் நீக்கப்பட்டதால் ரொம்பவே சோர்ந்துவிட்டார். இருந்தாலும் நிச்சயம் நல்லது நடக்கும் என்கிற நம்பிக்கையுடன் இருக்கிறார் ஆனந்தி.
ஒரிஜினல் இல்லை: இதற்கிடையே ஜனநாயகன் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்தார் சங்கீதா என்று வெளியான வீடியோ போலி என்பது தெரிய வந்திருக்கிறது. கணவர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டிருக்கிறார் சங்கீதா. அந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் மாதம் நடக்கவிருக்கிறது.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
கடைசியாக ஒரு முறை விஜய் நடித்த ஜனநாயகன் படம் இரண்டாவது முறையாக ஆன்லைனில் கசியவே தளபதி ரசிகர்கள் மனமுடைந்து போய்விட்டார்கள். ஏப்ரல் மாதம் தான் கசிந்தது என்று பார்த்தால் தற்போதுமா, கடவுளே இது என்ன கொடுமை என்றார்கள்.
Source link
