நடுக்கத்தை ஏற்படுத்தும் போர் பதற்றம் நாளை சந்தை எப்படி 'ரியாக்ட்' செய்யும்? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

இ ஸ்ரேல் – ஈரான் இடையிலான புவிசார் அரசியல் பதற்றங்கள், உலக பங்குச் சந்தைகளில் ஒருவித நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆனால், இது பீதி அடைவதற்கான நேரமல்ல; மாறாக, முதலீடு செய்வதற்கு ஏற்ற வாய்ப்பு என, நிதி மேலாண்மை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

‘பி.எம்.எஸ்., -  ஏ.ஐ.எப்., வேர்ல்டு’ கருத்தரங்கில் நிபுணர்கள் தெரிவித்ததாவது:

 வரும் திங்கட்கிழமை சந்தை துவக்கத்தில் சற்று பலவீனமாக இருக்கலாம்; ஆனால், அது அச்சப்படும் வகையில் இருக்காது

 சந்தையில் நிலவும் இந்த தற்காலிக மாற்றத்தை கண்டு, பீதியடைந்து பங்குகளை விற்க வேண்டாம்

 இந்திய பங்குச்சந்தை, குறிப்பாக ‘ஸ்மால் அண்டு மிட்கேப்’ பங்குகள், கடந்த 17 -18 மாதங்களாக நிலவி வந்த மந்த நிலையின் இறுதி கட்டத்தில் உள்ளன

 பல நிறுவனங்கள் 30 – 40 சதவீத வளர்ச்சியை எட்டியிருந்தாலும், அவற்றின் பங்கு விலை 20 சதவீதம் வரை சரிந்துள்ளது. இது ஒரு வலுவான மீட்சிக்கு முன்னால் நடக்கும் மாற்றம்

 குறிப்பாக, நிறுவனங்களின் லாப வளர்ச்சிக்கும், அவற்றின் பங்கு விலை உயர்வு க்கும் இடையிலான தொடர்பு 0.72ல் இருந்து 0.30ஆக குறைந்துள்ளது. அதாவது, லாபம் ஈட்டும் பல நிறுவனங்களின் பங் கு விலை இன்னும் உயரவில்லை. இது ஒரு பெரிய ஏற்றத்துக்கு முந்தைய அறிகுறியாகும்

 கடந்த காலங்களில் இது போன்ற மதிப்பீட்டு சரிவுகள் ஏற்பட்ட போது, அடுத்த 12 மாதங்களில் 40 – 70 சதவீதம் வரை வருமானம் கிடைத்துள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பெரிதாக பாதிக்காது ஈரான் மீதான தாக்குதல் என்பது, சந்தையை பொறுத்தவரை ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. கொரோனா போன்ற முற்றிலும் எதிர்பார்க்காத நிகழ்வுகளுடன் ஒப்பிடும்போது, இது சந்தையை பெரிய அளவில் பாதிக்காது. – அமித் ஜெஸ்வானி தாக்குதல் நடக்குமா இல்லையா என்ற நிச்சயமற்ற தன்மையே சந்தைக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. இப்போது அது நடந்துவிட்டதால், சந்தை தெளிவுடன் அடுத்த கட்டத்துக்கு நகர முடியும். – பவன் பாராடியா சந்தையில் உடனடி சரிவு இருந்தாலும், அது மிகக் குறுகிய காலத்துக்கே இருக்கும். – ராதா ராமன் அகர்வால்

கவனிக்க வேண்டிய துறைகள்  உயர்தர நுகர்வு பொருட்கள்  உற்பத்தி துறை  மருத்துவம் மற்றும் மருத்துவமனைகள்

Source link