நட்பு சண்டை என்ற பெயரில் திமுகவுக்கு `செக்’ – புதுச்சேரியில் கூட்டணியை உடைக்கிறதா காங்கிரஸ்?

தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் எங்கள் கூட்டணி தொடரும் என்று அறிவித்தது இந்தியா கூட்டணி. அதையடுத்து காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சியான வி.சி.க ஒரு தொகுதியிலும், தி.மு.க 13 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அறிவிப்பு வெளியானது.

வேட்பு மனு தாக்கலுக்குப் பிறகு காங்கிரஸ் மற்றும் தி.மு.க தனித்தனியே தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டன. அதில் தி.மு.க-வுக்கு ஒதுக்கப்பட்ட நெல்லித்தோப்பு, முத்தியால்பேட்டை, காலாப்பட்டு, மங்கலம், திருபுவனை உள்ளிட்ட ஐந்து தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் `ஏ’ மற்றும் `பி’ படிவங்களுடன் வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தனர்.

புதுச்சேரி திமுக - காங்கிரஸ்

புதுச்சேரி திமுக – காங்கிரஸ்

அதேபோல வி.சி.க-வுக்கு ஒதுக்கப்பட்ட உழவர்கரை தொகுதியிலும் காங்கிரஸ் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அது குறித்து தி.மு.க முறையிட்டதும், தங்கள் கட்சி வேட்பாளர்களை வாபஸ் வாங்குமாறு கூறியது காங்கிரஸ். ஆனால் அந்த ஆறு தொகுதிகளிலும் வாபஸ் வாங்க மாட்டோம் என்று கூறி வருகின்றனர் காங்கிரஸ் வேட்பாளர்கள்.

காங்கிரஸ் கட்சியின் இந்தப் போட்டி வேட்பாளர்கள் `மூவ்’, தி.மு.க-வையும் வி.சி.க-வையும் உஷ்ணமேற்றியிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, `புதுச்சேரியில் காங்கிரஸின் அணுகுமுறையில் எங்களுக்கு அதிருப்தி இருக்கிறது. அங்கு கூட்டணிக்கு தலைமையேற்கும் காங்கிரஸ், தி.மு.க போட்டியிடும் 5 தொகுதிகளில் வாபஸ் பெறுமா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

Source link