நமது சிறப்பு நிருபர்ஓட்டுக்கு காசு கொடுக்கிற அவசியமும் எனக்கு இல்லை என பிரசாரத்தில் நாம் தமிழர் கட்சி

நமது சிறப்பு நிருபர்

ஓட்டுக்கு காசு கொடுக்கிற அவசியமும் எனக்கு இல்லை என பிரசாரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில் தெரிவித்தார்.

தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடு பிடித்து விட்டது. பெரிய கட்சிகளோ கூட்டணிகளை சமாதானப்படுத்தி தொகுதி ஒதுக்கீடு செய்வதில் மும்முரம் காட்டி வருகிறது. ஆளும் திமுக கூட்டணியில் கிட்டத்தட்ட தொகுதி பங்கீடு முடிந்து விட்டது. அதே நேரத்தில் எந்த அக்கப்போரும் இல்லாமல் அதிமுகவும் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதியை இறுதி செய்து கொடுத்து விட்டது. கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை பங்கு போட்டு கொடுக்கும் எந்த பிரச்னைகளும் இல்லாத சீமானோ தேர்தல் பிரசாரத்தில் பாட்டுப்பாடி ஓட்டு கேட்க ஆரம்பித்து விட்டார்.

வேலூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் சீமான் பேசியதாவது: எதற்காக எந்த கட்சிகளுடனும் கூட்டணி இல்லாமல் நிற்கிறேன். கூட்டணி நோட்டு அணி எல்லாம் ஏமாற்றுவது, ஓட்டுக்காக நிற்கிறவன் யார் நாட்டுக்காக நிற்கிறவன் யார் என்று கூட உங்களுக்கு தெரியாதா? உங்களது வாக்கை குறிவைப்பவன் யார்? என்று கூட தெரியாதா? இந்த அறிவு சமூகம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

தொண்டை வறண்டு

ஒரு எளிய மகன் வந்து 15 ஆண்டுகளாக கத்தி கத்தி பேச்சை மூச்சாக்கி, ரத்தம் சிந்தி வேர்வையாக ஓட ஓட தொண்டை வறண்டு, கத்தி, கத்தி, மான தமிழர்களை ஒன்று திரட்டி 36 லட்சம் வாக்கை பெற்று அங்கீகரிக்கப்பட்ட மூன்றாவது பெரிய கட்சியாக வந்திருக்கிறேன் என்றால், இன்னும் தன்மானமிக்க தமிழ் மக்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள், நல்ல அரசியலையும், நல்லாட்சியையும் விரும்பக்கூடிய மக்கள் இருக்கிறார்கள் என்பதற்கு சான்று உங்கள் மகன் தான். அறிவார்ந்த அன்பு சொந்தங்கள், ஆழ்ந்து சிந்தித்து இந்த தேர்தலை கையில் எடுங்கள்.

இது அடுத்த ஐந்து ஆண்டு கால ஆட்சியை அமைய வைக்கப் போகிற, மிகப்பெரிய வாய்ப்பு, ஒரு புரட்சிகர மாறுதலை உருவாக்க முடியும். நாம் தமிழர் என்பது ஒரு கட்சியின் பெயர் அல்ல, நாம் பிறந்த பெருமைமிக்க இனத்தின் அடையாளம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மாற்றம் என்பது சொல்ல அல்ல ஒரு செயல். மாறுவோம், மாற்றுவோம். இது மாற்றத்திற்கான ஒரு எளிய மக்களின் புரட்சி. உங்கள் மதிப்பு மிக்க வாக்கை விவசாய சின்னத்திற்கு தந்து வெற்றி பெற செய்யுங்கள்.

குழப்பம் இல்லை

விவசாய சின்னத்திற்கு வாக்களிப்போம். வருங்கால இளைய தலைமுறைக்கு வாழ்வளிப்போம். என் அன்பு சொந்தங்களே ஓட்டு போட்டு பாருங்கள், அப்புறம் பாருங்கள் நாட்டை, புரட்சி எப்பொழுதும் வெல்லும், உங்கள் பிள்ளைகள் எங்களின் வெற்றி அதை சொல்லும். அவர்களுக்கெல்லாம் யார் யாருக்கு எந்தெந்த சீட்டு என்பதை பிரிப்பதிலேயே மண்டை காயுது, எனக்கு கொள்கையில் தெளிவு குழப்பம் இல்லா முடிவு, ஓட்டுக்கு காசு கொடுக்கிற அவசியமும் எனக்கு இல்லை.

கட்டிப்புடிச்சு அழுவங்க

போட்டால் போடுங்கள், போடவில்லை என்றால் போங்கள், எனது பிறவி கடமை நான் கத்தி கிட்டு செத்தாவது போகிறேன், ஆனால் நல்லது நடக்க வேண்டும் என்றால் இந்த மகனின் கையை இறுக பற்றி கொள்ளுங்கள், சரியாக இருந்தால் எங்களுக்கு வாக்கு தந்து வெற்றி பெற செய்யுங்கள், இல்லையெனில் அந்த சனியன கட்டிப்புடிச்சு அழுங்க. இவ்வாறு சீமான் பேசினார்.

Source link