நமது சிறப்பு நிருபர்மக்கள் உண்மையாகவே மகிழ்ச்சியில் இருந்தால் ஏன் போராட்டங்கள் நடக்கின்றன. திமுக ஆட்சியே

நமது சிறப்பு நிருபர்

மக்கள் உண்மையாகவே மகிழ்ச்சியில் இருந்தால் ஏன் போராட்டங்கள் நடக்கின்றன. திமுக ஆட்சியே அவுட் ஆப் கண்ட்ரோல் தான். உங்களுக்கு யார் வேண்டும்; விஜயா அல்லது ஸ்டாலினா என சேலம் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசுகையில் குறிப்பிட்டார்.

சேலத்தில் தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் பேசியதாவது: தைரியம் தான் எல்லாத்துக்கும் அடிப்படை. எல்லாத்துக்கும் பவர். அப்படிப்பட பவர் எதில் இருந்து ஆரம்பிக்கிறது என்றால் நம்மை ஏளனமாக பார்க்கிற நேரத்தில், நாம் யார் என்று நிரூபித்து காட்ட வேண்டும் என்று தோன்றும். ஒரு உத்வேகம் வரும். அப்படி நிரூபிக்கும் பாயிண்ட் எதில் இருந்து ஆரம்பிக்கிறது என்றால் எந்த விஷயத்தில் நம்மளை கிண்டலும், கேலியுமாக பேசுகிறார்களோ, அதே விஷயத்தை வைத்து பாசிட்டிவ் ஆக மாற்றுவதும், தீயாக மாற்றுவதும் அந்த இடத்தில் தான் பவர் ஆரம்பிக்கிறது. அப்படிப்பட்ட அந்த பவரை சொல்கிற உண்மையான பாயிண்டில் இருந்து ஆரம்பிக்கலாம்.

கிண்டலும், கேலியும்!

ஏ விஜய் வீட்டை விட்டு வெளியே வா, ஏ விஜய் பனையூரை விட்டு வெளியே வா, அப்படி என்று சொல்பவர்களுக்கு என் வீடு எது என்று தெரியுமா? முதலில் என் வீடு எங்கு இருக்கிறதா என்று தெரியுமா? என்னை சீண்டி பார்ப்பதாக நினைத்து கிண்டலும், கேலியுமாக பேசுபவர்களுக்கு நான் சொல்கிறேன். இந்த தமிழ்நாடு…தமிழ்நாடு என்று சொல்கிறார்களே மற்றவர்களுக்கு, அது மாநிலமாக இருக்கலாம். எனக்கு தாய் நாடான தமிழகம் தான் என்னுடைய வீடு. என் வீட்டில் 8 கோடி பேர். ஒட்டுமொத்த தமிழக மக்களும் என் வீட்டு மக்கள். என் குடும்பம், என் உறவு, என் சொந்தம். இந்த 8 கோடி மக்கள் உடன் நிக்கப்போவது விஜய் மட்டும் தான்.

நீதி கேட்டு…!

தமிழகத்தின் முதல் படை வீரனாக, முதல் பாதுகாவலனாக உங்கள் கூடவே நிற்க வேண்டும் என்பது தான் எனக்கு குறிக்கோள். இன்னைக்கு இந்த விஜய் உங்களிடம் ஓட்டு கேட்டு மட்டுமே வரவில்லை. நீதி கேட்டும் வந்து இருக்கிறேன். உங்களுக்காக நீதி கேட்க தான் அரசியலுக்கே வந்தேன். ஆனால் இன்றைக்கு நான் உங்களிடம் நீதி கேட்பதற்காக வந்து இருக்கிறேன். இந்த விஜய் என்னங்க தப்பு செய்தான். தன்னை நேசித்த மக்களுக்காக அரசியலுக்கு வந்தான். அது ஒரு தப்பா? எல்லாத்தையும் ஒதுக்கிவிட்டு மக்களுக்காக மட்டும் வந்தான், அது ஒரு தப்பா?

மற்ற கட்சிகளுக்கு எல்லாம் மாநாடு, பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கொடுப்பார்கள், இடம் கொடுப்பார்கள். ஆனால் நமக்கு மட்டும் கொடுக்கவும் மாட்டார்கள், கொடுக்கவும் மாட்டார்கள், இது என்னங்க நியாயம்?

மக்களிடம் நீதி

நான் மக்களை சந்திக்கவும், மக்கள் என்னை சந்திக்கவும் உரிய இடமும், பாதுகாப்பும் மற்ற கட்சிகளுக்கும் எல்லாம் கொடுப்பார்கள், ஆனால் எனக்கு கொடுக்க மாட்டார்கள். கொடுக்கவும் விட மாட்டார்கள், இது என்னங்க நியாயம். எஸ்ஓபி என்று சொல்வார்கள். மற்றனர்களுக்கு அது ‘ Standard Operating Procedure’ எனக்கு மட்டும் அது ஸ்டாலின் சார் ஆப்ரேட்டிங் procedure.

விஜய் உண்மையானவன், நமக்கு எதிராக சதி, பழி போடுகிறவர்கள் யார் என்று எனது சொந்தங்களாகிய உங்களுக்கு தெரியும். அதனால் நான் மக்களாகிய உங்களிடம் நீதி கேட்கிறேன். செல்பே எடுக்காத ஒரு கூட்டணி கணக்கு, செல்பே எடுக்காத ஒரு அற்த பழைய அர்த்மெட்டிக் கணக்கு. இது எல்லாம் வேலைக்கே ஆகாது. ஆணித்தரமாக அடித்து சொல்கிறேன்.

விசிலுக்கு தான்

காசு கொடுத்து ஓட்டு வாங்கி விடலாம் என்று கனவு காண்கின்றனர். அதுவும் இந்த விஜய் வந்த பிறகு நடக்கவே நடக்காது. ஆயிரம், 2 ஆயிரம், 3 ஆயிரம், 4 ஆயிரம், 5 ஆயிரம் என்று வண்டி வண்டியாக வந்து கொட்டுவார்கள். சாமி மேல சத்தியம் எல்லாம் வாங்குவார்கள். அப்படி தான் உங்களை இத்தனை வருடமாக ஏமாற்றி இருக்கிறார்கள். சந்தோஷமாக வாங்கி கொள்ளுங்கள். எல்லாம் உங்கள் பணம் தான். வாங்கிட்டு அவர்களின் காதில் விசில் அடித்து அனுப்புங்கள்.

நம்முடைய அடுத்த இளம் தலைமுறையினருக்கு ஒன்று சொல்கிறேன். இந்த பணத்தை கொடுத்து ஏமாற்றி ஓட்டு வாங்க வேண்டும் என்ற கலாசாரம் ஒழிய வேண்டும்.

எங்கள் ஓட்டு எங்கள் உரிமை. எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது. எங்கள் ஓட்டு விசில் சின்னத்துக்கு தான். மக்கள் உண்மையாகவே மகிழ்ச்சியில் இருந்தால் ஏன் போராட்டங்கள் நடக்கின்றன. திமுக ஆட்சியே அவுட் ஆப் கண்ட்ரோல் தான். உங்களுக்கு யார் வேண்டும்; விஜயா அல்லது ஸ்டாலினா? இவ்வாறு விஜய் பேசினார்.

தினமலர் நேரலை

சேலத்தில் விஜய் தலைமையில் நடந்த கட்சி நிகழ்ச்சி தினமலர் யுடியூப் உள்ளிட்ட இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

Source link