நமது சிறப்பு நிருபர்ரீல்ஸ் எல்லாம் நல்லா போடுறீங்க; அதேபோல் உங்கள் படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என

நமது சிறப்பு நிருபர்

ரீல்ஸ் எல்லாம் நல்லா போடுறீங்க; அதேபோல் உங்கள் படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என கல்வியை முன்னிறுத்தி இன்ஸ்டாவில் ரீல்ஸ் வெளியிடும் பண்ருட்டியைச் சேர்ந்த சிறுவர்கள் தேவா, ஜீவாவுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த சிறுவர்கள் தேவா, ஜீவா சமூக வலைதளங்களில் தங்களின் கலகலப்பான பேச்சில் கல்வியை முன்னிறுத்தி ரீல்ஸ் வெளியிட்டு வருகின்றனர். கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், நகைச்சுவையாகவும் வீடியோக்களை வெளியிடும் இவர்களை, முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டி, புத்தகங்களை வழங்கி ஊக்கப்படுத்தினார்.

இவர்கள் இன்ஸ்டாகிராமில் ‘Hi Guys.. நான் உங்கள் தேவா’ என்ற அறிமுகத்துடன் வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானவர்கள். கல்வியை பாதியில் நிறுத்திவிடாதீர்கள் (படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க) என இவர்களின் வீடியோக்கள் இணையத்தில் வைரலானது.

முதல்வர் ஸ்டாலின் இவர்களிடம் அவர்கள் படிக்கும் பள்ளியில் இருக்கு வசதிகள் குறித்து கேட்டறிந்தார். ரீல்ஸ் எல்லாம் நல்லா போடுறீங்க; அதேபோல் உங்கள் படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என சிறுவர்கள் தேவா, ஜீவாவுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ் செய்தார்.

வீடியோ இதோ!

படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க எனக் கல்வியை முன்னிறுத்தி இன்ஸ்டாவில் கலக்கும் சிறுவர்கள். முதல்வர் ஸ்டாலின் பாராட்டினார்.

Source link