நமது டில்லி நிருபர்
டில்லி செங்கோட்டை மறறும் சாந்தினி சவுக் பகுதியில் உள்ள சில கோவில்களை லஷ்கர் பயங்கரவாதிகள் தாக்க திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் டில்லியில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு மசூதியில் பிப்ரவரி 6ம் தேதி நடந்த குண்டுவெடிப்பில் 31 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்திற்கு இந்தியா மீது பாகிஸ்தான் பழி சுமத்தியது. ஆனால் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்து இருந்தது.
தற்போது பழிவாங்குவதற்கு டில்லி செங்கோட்டை, சாந்தினி சவுக் பகுதியில் உள்ள கோவில்களில் பெரிய அளவிலான பயங்கரவாத தாக்குதல் நடத்த சாத்தியம் உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தை நிகழ்ந்த லஷ்கர் இ தொய்பா அமைப்பினர் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
இதனால் டில்லியில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
பாதுகாப்பு படைகள் உஷார்ப்படுத்தப்பட்டு உள்ளன. கடந்தாண்டு நவம்பர் 10ம் தேதி டில்லி செங்கோட்டை அருகே நடந்த ஒரு பயங்கரமான கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு பயங்கரவாத எச்சரிக்கை வந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 24 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
