— நமது டில்லி நிருபர் – நாட்டின் முதல் மற்றும் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்தவரும், 'மூதறிஞர் ராஜாஜி'

— நமது டில்லி நிருபர் –

நாட்டின் முதல் மற்றும் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்தவரும், ‘மூதறிஞர் ராஜாஜி’ என்றழைக்கப்படும் பெருமைக்குரிய தலைவருமான, சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியின் மார்பளவு சிலை, ஜனாதிபதி மாளிகையில் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

கவர்னர் ஜெனரல் ‘மன தின் குரல்’ என்ற வானொலி நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் பேசிய பிரதமர் மோடி, ‘சுதந்திரம் அடைந்த பிறகும் ஜனாதிபதி மாளிகையில் பிரிட்டிஷாரின் சிலைகளே நிறுவப்பட்டன. அந்த மரபை உடைத்தெறியும் வகையில், நம் நாட்டின் முதல் மற்றும் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜியின் சிலை, ஜனாதிப தி மாளிகையில் பிப்., 23ல் நிறுவப்படும்’ என்றார்.

பிரதமர் கூறியபடியே, தலைநகர் டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில், ராஜாஜி சிலை திறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

‘ராஜாஜி உத்சவ்’ என்ற பெயரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜனாதிபதி திரவுபதி முர்மு, நாட்டின் முதல் மற்றும் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த, தமிழகத்தைச் சேர்ந்த ராஜாஜியின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார்.

ஜனாதிபதி மாளிகையின் மு க்கிய பகுதியாக கருதப்படும், அசோக மண்டபத்தின் கிராண்ட் ஓபன் படிக்கட்டிற்கு அருகே, பிரிட்டனைச் சேர்ந்த கட்டடக்கலை பொறியாளரான எட்வின் லுட்யன் என்ப வரின் சி லை இருந்தது.

புதிய நகரம் நாட்டின் தலைநகராக இருந்த கொல்கட்டாவை மாற்றி விட்டு, டில்லிக்கு வர பிரிட்டிஷ் நிர்வாகம் முடிவு செய்த போது, அவர்களின் வசதிக்காக ஒரு புதிய நகரத்தை வடிவமைக்கும் விதமாக, தற்போதுள்ள டில்லியின் வடிமைப்பையே இவர் தான் உருவாக்கினார்.

மேலும், ஜனாதிபதி மாளிகையின் கட்டுமானத்தை இவர் தான் மேற்கொண்டார். எனவே, அவரது பங்களிப்பை நினைவுகூர்ந்து, அவருக்கு சிலை வைக்கப்பட்டது.

தற்போது, எட்வின் லுட்யன் சிலை அகற்றப்பட்டு, அதற்கு பதிலாக, ராஜாஜியின் மார்பளவு சிலை வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்கள் நட்டா, ஜெய்சங்கர், தர்மேந்திர பிரதான், கஜேந்திர சிங் ஷெகாவத், எல்.முருகன் மற்றும் ராஜாஜி குடும்பத்தினர் பங்கேற்றனர்.

கவுரவிப்பு!

இந்த முயற்சி, காலனித்துவ மனநிலையின் எச்சங்களை நீக்குவதற்கும், நாட்டின் கலாசாரம், பாரம்பரியம், காலத்தால் அழியாத மரபுகளின் செழுமையை பெருமையுடன் ஏற்றுக் கொள்வதற்கும், பாரத மாதாவுக்கு தங்களின் பங்களிப்புகளால் சேவை செய்தவர்களை கவுரவிப்பதற்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதி. திரவுபதி முர்மு, ஜனாதிபதி

மிகப்பெரிய அங்கீகாரம்!

இந்தியா கண்ட தவப்புதல்வர்களில் ஒருவர் ராஜாஜி. அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரம் தரப்பட்டுள்ளது. இந்த சிலை, காலனித்துவ மனநிலையின் எச்சங்களை அகற்றுவதில், மற்றொரு முக்கிய படியைக் குறிக்கிறது. – சி.பி.ராதாகிருஷ்ணன், துணை ஜனாதிபதி

தொடரும் மாற்றம்

பிரதமர் மோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு, காலனித்துவ மரபை ஒழிக்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கி உள்ளது. அதன் ஒரு பகுதியாகவே, ராஜ் பவன் என்ற பெயரில் இருந்த கவர்னர் மாளிகைகள், லோக் பவன் என, மாற்றப்பட்டன. பி.எம்.ஓ., எனப்படும் பிரதமர் அலுவலகம், ‘சேவா தீர்த்’ என பெயர் மாற்றப்பட்டது. ராஜ்பாத் என்ற குடியரசு அணிவகுப்பு நடக்கும் பாதை, கடமை பாதை ஆனது. சென்ட்ரல் செக்ரட்டரியேட், தற்போது, கடமை பவன் என, மாற்றப்பட்டுள்ளது. இண்டியா கேட்டில் இருந்த ஜார்ஜ் மன்னர் சிலை அகற்றப்பட்டு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை நிறுவப்பட்டது. புதிதாக, ‘நேஷனல் வார் மெமோரியல்’ கட்டப்பட்டு, அங்கு அணையா விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில், பிரிட்டன் கட்டடக்கலை பொறியாளர் எட்வின் லுட்யன் சிலைக்கு பதில், ராஜாஜி சிலை அமைக்கப்பட்டுள்ளது.

Source link