நமது நிருபர்இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. சென்செக்ஸ் 1,705 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து

நமது நிருபர்

இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. சென்செக்ஸ் 1,705 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து உள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் நீடிக்கும் போர் பதற்றம் இந்திய பங்குச்சந்தைகளில் எதிரொலித்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,705 புள்ளிகள் சரிந்து 74,998 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 503 புள்ளிகள் சரிந்து 23,274 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது.

இந்திய பங்குச்சந்தை காலையில் வீழ்ச்சியுடன் தொடங்கியது. கடந்த 3 நாட்களாக பங்குச்சந்தை உயர்ந்து வர்த்தகம் ஆகிய நிலையில் இன்று வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது. மத்திய கிழக்கின் முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்ததால், பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்துள்ளது என நிபுணர்கள் தெரிவித்தனர்.

Source link