நமது நிருபர் ஈரானில் 3,000க்கும் மேற்பட்ட இலக்குகளை துல்லியமாக தாக்கி உள்ளோம் என அமெரிக்க படை மத்திய தலைமையகம்

நமது நிருபர்

ஈரானில் 3,000க்கும் மேற்பட்ட இலக்குகளை துல்லியமாக தாக்கி உள்ளோம் என அமெரிக்க படை மத்திய தலைமையகம் தெரிவித்துள்ளது.

மேற்கு ஆசிய நாடான ஈரானுக்கும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கும் இடையே கடந்த ஒரு வாரமாக போர் நீடிக்கிறது. அமெரிக்காவின் தாக்குதலில் ஈரான் தனது ராணுவம், கடற்படை மற்றும் முக்கிய தலைவர்களை இழந்து விட்டது. நிபந்தனையற்ற சரண் அடைவதை தவிர ஈரானுடன் எந்த ஒப்பந்தமும் இருக்காது என அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில் ஈரானில் இலக்குகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வீடியோவை பகிர்ந்து, அமெரிக்க படை மத்திய தலைமையகம் கூறியிருப்பதாவது:

ஈரானில் அமெரிக்கப் படைகள் கடந்த ஒரு வாரமாக நடத்தி வந்த தாக்குதலில் 3,000க்கும் மேற்பட்ட இலக்குள் குறிவைக்கப்பட்டு துல்லியமாக அழிக்கப்பட்டன.

எங்கள் படைகள் தாக்குதல் நடத்தும் வேகத்தை குறைக்கவில்லை. தாக்குதல் நடத்தப்படுவது தொடர்கின்றன” என தெரிவித்துள்ளது.

Source link