நமது நிருபர்
உக்ரைன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மலிவு விலை ‘ட்ரோன்’ தடுப்பு அமைப்புகளை உருவாக்க ஐந்து ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டுள்ளன.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நான்கு ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. இந்தப் போரின்போது, அண்டை நாடான போலந்தில் சில ஏவுகணைகள், ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள் விழுந்தன.
இதையடுத்து, தங்களுடைய எல்லையை பாதுகாக்கும் வகையில், ‘இ – 5’ எனப்படும், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போலந்து மற்றும் பிரிட்டன் ஆகிய ஐந்து ஐரோப்பிய நாடுகள் கூட்டு திட்டத்தை உருவாக்கியுள்ளன.
அதன்படி, மிகவும் விலை குறைந்த ஏவுகணைகள், ட்ரோன்களை தடுத்து அழிப்பதற்கு, நவீன ஏவுகணைகள் பயன்படுத்துவதை தவிர்க்க புதிய திட்டம் உருவாக்கியுள்ளன.
அதன்படி, எல்லைகளில் வான் பாதுகாப்புக்காகவும், விலை குறைந்த ட்ரோன்களை தடுத்து அழிக்க, மிகவும் விலை குறைந்த ட்ரோன்களை உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நான்கு ஆண்டாக நடக்கும் போரில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இதுபோன்ற விலை குறைத்த ட்ரோன்களை பயன்படுத்துகின்றன. உக்ரைனின் தொழில்நுட்பத்தை பயன்படுத்த இந்த நாடுகள் முடிவு செய்துள்ளன.
