நமது நிருபர்கள் இறக்கும் எளியவர்களை, கொடிய குற்றம் புரிந்த பயங்கரவாதிகள் போல் தேடி வேட்டையாடுகின்றனர் என

நமது நிருபர்

கள் இறக்கும் எளியவர்களை, கொடிய குற்றம் புரிந்த பயங்கரவாதிகள் போல் தேடி வேட்டையாடுகின்றனர் என சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து சீமான் கூறியதாவது: தென்காசி மாவட்டம், மருதம்புத்துாரில், பனை தொழிலாளி மணிகண்டன் மீது, போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது, கடும் கண்டனத்துக்குரியது. சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் படுகொலை வழக்கின் தீர்ப்பை பார்த்த பின்னும், தமிழக போலீசார் எந்த பாடமும் கற்றுக்கொள்ளாமல், மனசாட்சி இல்லாமல், அப்பாவி மக்கள் உயிருடன் விளையாடுவது வெட்கக்கேடு.

கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையால், கொலை மற்றும் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. அந்த குற்றவாளிகளை பிடிக்க திறனற்ற போலீசார், கள் இறக்கும் எளியவர்களை, கொடிய குற்றம் புரிந்த பயங்கரவாதிகள் போல் தேடி வேட்டையாடுகின்றனர். உடலுக்கு எந்த தீங்கும் செய்யாத கள்ளை, போதைப்பொருள் என தடை செய்துள்ள தி.மு.க., அரசு, தன் நேரடி நிர்வாகத்தில், ‘டாஸ்மாக்’கில் விற்பது புனித தீர்த்தமா? இவ்வாறு சீமான் கூறினார்.

Source link