நமது நிருபர்சென்னை கமலாலயத்தில் தமிழக சட்டசபை தேர்தலில் களம் காணும் பாஜ வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான

நமது நிருபர்

சென்னை கமலாலயத்தில் தமிழக சட்டசபை தேர்தலில் களம் காணும் பாஜ வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது.

அ.தி.மு.க., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில், பா.ஜ., – பா.ம.க., – அ.ம.மு.க., – த.மா.கா., புரட்சி பாரதம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய ஜனநாயக கட்சி உள்ளன. இதில், பா.ஜ.,வுக்கு 27, பா.ம.க.,வுக்கு 18, அ.ம.மு.க.,வுக்கு 11 என்ற எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் போக, மீதமுள்ள 169 தொகுதிகளில், அ.தி.மு.க., போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்ற விபரத்தை இபிஎஸ் வெளியிட்டுள்ளார்.

இந்த சூழலில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் அதிமுக கூட்டணி கட்சிகள் இறங்கி உள்ளது. தேர்தலில் களம் காணும் பாஜ வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது. பாஜவின் அமைப்புச் செயலாளர் பி.எல் சந்தோஷ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ளவில்லை.

தே.ஜ., கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக, தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய விரும்புகிறேன். தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை. என் ஆதரவாளர்கள் ஐந்து பேருக்கு ‘சீட்’ வழங்குங்கள்’ என அண்ணாமலை கட்சி தலைமையிடம் வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்கள் பட்டியல் வெளியாக உள்ளது.

Source link