நமது நிருபர்தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இன்று (மார்ச் 11) நீங்கள்

நமது நிருபர்

தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இன்று (மார்ச் 11) நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் என்னென்ன?

அது எத்தனை மணிக்கு என்பது குறித்து ஓர் சிறப்பு அலசல். மேலும் தொடர்ந்து விவரங்களை அறிய தினமலர் இணையதளம் தொடர்ந்து படியுங்கள்.

* தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று முதல் துவங்குகிறது. மொத்தம், 4 ஆயிரத்து 219 மையங்களில் 9 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

* திருச்சியில் இன்று, 5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை, பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நடக்கும் பொதுக்கூட்டத்தில், பிரதமர் பேசுகிறார்.

* மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் அவகாசம் வழங்க முடியாது என தேசிய தேர்வு முகமை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

* காஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு தொடர்பாக இன்று ஹோட்டல் உரிமையாளர்களுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்த உள்ளது. மாற்று ஏற்பாடு குறித்து எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளுடனும் ஆலோசிக்கவும் முடிவு செய்துள்ளது.

* தி.மு.க., கூடுதல் தொகுதிகள் வழங்க முன்வராததால், கூட்டணியிலிருந்து வெளியேறலாமா அல்லது தொடரலாமா என, ம.தி.மு.க., நிர்வாகிகளுடன் வைகோ இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

* தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘ஆல் தி பெஸ்ட்’ மாணவர்களே!

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உங்களது வாழ்த்துக்களையும், அறிவுரைகளையும் கமென்ட் செய்யுங்கள் வாசகர்களே!

Source link