நமது நிருபர்
தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இன்று (மார்ச் 15) நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் என்னென்ன?
அது எத்தனை மணிக்கு என்பது குறித்து ஓர் சிறப்பு அலசல். மேலும் தொடர்ந்து விவரங்களை அறிய தினமலர் இணையதளம் தொடர்ந்து படியுங்கள்.
* காஸ் சிலிண்டர் விவகாரத்தில், மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் நடக்கும் போராட்டங்களில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
* தமிழகத்தில் இன்று வெப்பநிலை இயல்பை விட சற்று அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
* குளறுபடிகளால் பிப்ரவரி 8ம் தேதி ரத்து செய்யப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ பதவிகளுக்கு இன்று முதன்மைத் தேர்வு நடைபெறுகிறது.
* கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக, தவெக தலைவர் விஜயிடம் இன்று சிபிஐ மீண்டும் விசாரிக்கிறது. டில்லியில் உள்ள அலுவலகத்தில் 3து முறையாக விஜய் விசாரணைக்கு ஆஜராகிறார்.
* வரும் சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக, திமுக – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்று 4ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 6 தொகுதிகள் கேட்டுவரும் நிலையில் 5 மட்டுமே ஒதுக்க முடியும் என திமுக தலைமை கூறி வருவதால் இழுபறி நீடித்து வருகிறது.
இன்றைய போட்டி
* சுவிட்சர்லாந்தின் பசலில் சுவிஸ் ஓபன் பாட்மின்டன் தொடரின் பைனல் இன்று மதியம் 3.30 மணிக்கு நடைபெறுகிறது.
* பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட்- ஆஸ்டன் வில்லா அணிகள் மோதுகின்றன.
இடம்: மான்செஸ்டர், நேரம்: இரவு-7.30 மணி.
