நமது நிருபர்
தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இன்று (மார்ச் 23) நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் என்னென்ன?
அது எத்தனை மணிக்கு என்பது குறித்து ஓர் சிறப்பு அலசல். மேலும் தொடர்ந்து விவரங்களை அறிய தினமலர் இணையதளம் தொடர்ந்து படியுங்கள்.
* தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை- மகன், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கொலை வழக்கில், 6 ஆண்டுகால விசாரணைக்கு பிறகு இன்று மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
* மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று லோக்சபாவில் நிறுவன சட்டதிருத்த மசோதாவை தாக்கல் செய்ய உள்ளார்.
* திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள முருகன் கோவிலில் இன்று வழிபாடு நடத்தி, தேர்தல் பிரசாரத்தை சீமான் துவக்குகிறார். தேர்தல் பிரசாரத்தின்போது, வாக்காளர்களை கவர்வதற்காக, தமிழகத்தில் நிலவும் பிரச்னைகளை மையப்படுத்தி, பல்வேறு பாடல்களை பாடி பயிற்சி எடுத்து வருகிறார்.
* அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு இன்று இறுதி செய்யப்பட உள்ளது. இதற்காக, இன்று சென்னை வரும் தமிழக பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், அ.தி.மு.க., பொதுச்செயலர் இபிஎஸ்ஐ சந்தித்து பேசுகிறார். தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் பெற்ற தொகுதிகளை விட, கூடுதலாக பெறுவதில் தமிழக பா.ஜ., தீவிரம் காட்டி வருகிறது.
* பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
* தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலையில் மார்க்சிஸ்ட் மாநில செயற்குழுக் கூட்டம் இன்று நடக்கிறது. 5 தொகுதிகளை ஏற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்திய முதல்வர் ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து ஆலோசனை நடக்கிறது.
* தமிழகத்தில் வாக்குப்பதிவு மற்றும் VVPAT இயந்திரங்கள் சுழற்சி முறையில் அனுப்பி வைக்கும் முதற்கட்ட பணி (First Randomization) இன்று மாவட்டந்தோறும் தொடங்குகிறது
* திமுகவுடன் தொகுதிகளை பெறுவதில் இழுபறி நீடிக்கும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழுக் கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
