நமது நிருபர்தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இன்று (மார்ச் 24) நீங்கள்

நமது நிருபர்

தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இன்று (மார்ச் 24) நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் என்னென்ன?

அது எத்தனை மணிக்கு என்பது குறித்து ஓர் சிறப்பு அலசல். மேலும் தொடர்ந்து விவரங்களை அறிய தினமலர் இணையதளம் தொடர்ந்து படியுங்கள்.

* சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்கினால் வெற்றி வாய்ப்பு இருக்கும் என கலந்து பேசி முடிவு எடுக்க வாய்ப்புள்ளது.

* திமுக-விசிக இடையே இன்று 2ம் கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. தொகுதி உடன்பாடு எட்டப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

* ஏப்ரல் 9ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் புதுச்சேரி, கேரளா, அசாமில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடக்கம்; வேட்புமனு தாக்கல் நிறைவுநாளான நேற்று(மார்ச் 23) வேட்பாளர்கள் அதிகமானோர் வேட்புமனு தாக்கல் செய்ததால் அரசியல் களம் அனல் பறந்தது.

* உலக காசநோய் தினம் இன்று. காசநோய் பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த உலக காசநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

* இந்திய பங்குச் சந்தையில் ஏற்றத்துடன் தொடங்கியது. சென்செக்ஸ் 1000 புள்ளிகளும், நிப்டி 336 புள்ளிகளும் ஏற்றம் கண்டது.

* 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 2,720 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 340 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 13 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Source link