நமது நிருபர்தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இன்று (மார்ச் 31) நீங்கள்

நமது நிருபர்

தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இன்று (மார்ச் 31) நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் என்னென்ன?

அது எத்தனை மணிக்கு என்பது குறித்து ஓர் சிறப்பு அலசல். மேலும் தொடர்ந்து விவரங்களை அறிய தினமலர் இணையதளம் தொடர்ந்து படியுங்கள்.

* தமிழக சட்டசபை தேர்தலில், தேஜ கூட்டணியில் 27 தொகுதிகளில் பாஜ போட்டியிடுகிறது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று சென்னையில் பாஜ வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுகிறார்.

* கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு திருவாரூரில் பிரசாரத்தை தொடங்குகிறார்.

* தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை, புதுச்சேரி தேர்தலில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரசாரம் செய்கிறார்.

* இன்று நடைபெறும் 4வது லீக் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.

Source link