நமது நிருபர்
தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இன்று (பிப்ரவரி 10) நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் என்னென்ன?
அது எத்தனை மணிக்கு என்பது குறித்து ஓர் சிறப்பு அலசல். மேலும் தொடர்ந்து விவரங்களை அறிய தினமலர் இணையதளம் தொடர்ந்து படியுங்கள்.
* ஜனநாயகன் பட சென்சார் தொடர்பான வழக்கை ஐகோர்ட்டில் இருந்து வாபஸ் பெறுவதாக தயாரிப்பு நிறுவனம் பதிவாளருக்கு கடிதம் எழுதி இருந்த நிலையில், இன்று காலை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு உள்ளது.
* சென்னை ராயப்பேட்டையில் இன்று காலை 10 மணிக்கு அன்புமணி தரப்பு பாமக இளைஞரணி பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. பாமக அன்புமணிக்கு சொந்தமானது என தேர்தல் கமிஷன் விளக்கத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், இந்த கூட்டம் நடப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
* கொளத்தூரில் ரூ.11.37 கோடியில் புதிய ஒருங்கிணைந்த காவல் அலுவலகக் கட்டடத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
* தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வரும் நிலையில், இன்று மாலை 4 மணிக்கு விஜய் தலைமையில் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக நடக்கிறது.
* டில்லியில் இன்று தேர்தல் கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் எம்பி ராகுல் உள்ளிட்டோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள 77 மாவட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
3 போட்டிகள்
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று 3 ஆட்டங்கள் நடைபெற உள்ளன.
* டில்லியில் காலை 11 மணிக்கு நடைபெறும் போட்டியில் நமீபியா- நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.
* சென்னை சேப்பாக்கத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து- ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதுகின்றன.
* கொழும்பில் இரவு 7 மணிக்கு நடக்கும் போட்டியில் பாகிஸ்தான்- அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.
