நமது நிருபர் பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள அமெரிக்க தூதரகத்தை சூறையாடினர். அப்போது அமெரிக்க ராணுவத்தினர்

நமது நிருபர்

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள அமெரிக்க தூதரகத்தை சூறையாடினர். அப்போது அமெரிக்க ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர்.

ஈரான் ஆட்சியாளர் கமேனி கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் போராட்டக்காரர்கள், கராச்சி நகரில் அமெரிக்க துணை துாதரகத்தை அடித்து நொறுக்கினர்.

அப்போது போராட்டக்காரர்களை அமெரிக்க ராணுவத்தினர் கட்டுப்படுத்த முயன்றனர். பின்னர் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.

ஐநா அலுவலகம் தீக்கிரை

பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரின் ஒரு பகுதியான ஸ்கர்துவில் செயல்படும் ஐநா அலுவலகம், ராணுவப்பள்ளி, எஸ்.பி., அலுவலகத்துக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். ஈரானில் கமேனி கொல்லப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்தினர்.

ஈராக்கிலும் தாக்குதல்

ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்திலும் அமெரிக்க துாதரகம் தாக்கப்பட்டது. நுாற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள், அமெரிக்க துாதரகத்தை அடித்து நொறுக்கினர். தாக்குதலை முன்கூட்டியே எதிர்பார்த்து அங்கிருந்த ஊழியர்கள், தப்பி வெளியேறினர்.

சென்னையில் முற்றுகை

சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தில் ஈரான் ஆட்சியாளர் கமேனி கொல்லப்பட்டதை கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் முற்றுகை போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் தனியரசு, கருணாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Source link