நமது நிருபர்
போர் பதற்றத்தால் துபாயில் சிக்கி தவித்த இந்தியர்கள் 250 பேருக்கு தனது பண்ணை வீட்டில் தங்க இடம் கொடுத்து உதவிய ராஜஸ்தான் தொழிலதிபர் தீரஜ் ஜெயினுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
ஈரானில் இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து தாக்குதல் நடத்தியது. வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களை குறி வைத்து ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது. இதனால் மேற்காசிய நாடுகளில் போர் பதற்றம் காரணமாக இந்தியர்கள் பலர் வளைகுடா நாடுகளில் விமானம் கிடைக்காமல் தவித்தனர்.
இதனையறிந்த ராஜஸ்தானை சேர்ந்த தீரஜ் என்ற தொழிலதிபர் அஜ்மனில் உள்ள தனது பண்ணை வீட்டில் 250 பேருக்கு தங்க ஏற்பாடு செய்தார். அவர் தனது வாகனங்களை அனுப்பி விமான நிலையங்களில் பரிதவித்து நின்று கொண்டிருந்த இந்தியர்களை அழைத்து வந்தார். அவர்களுக்கு தங்க இடம் அளித்து உதவி செய்தார்.
இந்திய குடும்பங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்ற அவர், தங்கும் இடம், உணவு மற்றும் பாதுகாப்பு வழங்கி உள்ளார். அவரது பண்ணை வீட்டில் தங்கியிருந்த பயணி ஒருவர் இணையதளத்தில் பதிவிட்ட வீடியோ வைரல் ஆகியது. மறுபக்கம், தீரஜ் ஜெயினுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.
இந்த உன்னதமான செயலுக்கு தீரஜ் ஜெயினை பாராட்டி கமென்ட் செய்யுங்கள் வாசகர்களே!
