நமது நிருபர்
மதுரையில் இருந்து காரைக்குடிக்கு பிரசாரத்திற்காக சென்று கொண்டிருந்த போது, சிவகங்கை அருகே விஜய் பிரசார வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.
சிவகங்கை மாவட்டத்தில் போட்டியிடும் த.வெ.க., வேட்பாளர்களை ஆதரித்து காரைக்குடியில் இன்று விஜய் பிரசாரம் செய்கிறார். இதற்காக, சென்னையில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு விஜய் வந்தார். பிறகு அவர் மதுரையில் இருந்து காரைக்குடிக்கு பிரசார வாகனத்தில் சென்றார்.
திருப்பத்தூர் அருகே விஜய் பிரசார வாகனத்தை இடைமறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பணம், பரிசுப்பொருட்கள் உள்ளிட்டவை ஏதும் சிக்கவில்லை என்பதால் அவரை வாகனத்தை செல்ல அதிகாரிகள் அனுமதித்தனர். அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
